பேசாதீங்க.. என் புருஷன பத்தி பேசாதீங்க.. ஆத்திரத்தில் ஆரியை அசிங்கப்படுத்த முயன்ற அனிதா!
சென்னை: ஆரி தனது குடும்பத்தை தவறாக பேசியது போன்று காட்ட முயற்சித்து அனிதா கத்தியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.
Recommended Video

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மாட்டினீயா என்ற தலைப்பில் ஃபன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு ஹவுஸ்மேட் கேள்வி கேட்க மற்றொரு ஹவுஸ்மேட் பதில் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் ஷிவானி ஆரியிடம் கேள்வி கேட்டார். அதவாது இந்த வீட்டில் யார் ரொம்ப டீமோட்டிவேட்டடாக இருக்கிறார் என்று கேட்டார்.

வீட்டு ஞாபகம் வந்துடுச்சு
அதற்கு பதில் சொன்ன ஆரி, அனிதாவின் பெயரை குறிப்பிட்டார். அதற்கு காரணமாய் அனிதா அர்ச்சனா மேல் படுத்து அழுது நான், என் வீட்டுக்கு போக வேண்டும், என் வீட்டு ஞாபகம் வந்துடுச்சு என்றார்.

என் குடும்பத்த பத்தி பேசாதீங்க
அவர் பலமுறை அவரது அப்பா அம்மா மற்றும் பிரபா குறித்து கூறியிருக்கிறார் என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே குறுக்கிட்ட அனிதா, என் குடும்பத்த பத்தி பேசாதீங்க. என் அப்பா அம்மா பிரபாவ பத்தி இங்க பேசாதீங்க என்று கத்தினார்.

திருப்பி திருப்பி சொல்லி
தொடர்ந்து என் குடும்பத்தை பத்தி பேசாதீங்க, குடும்பத்தை பத்தி பேசாதீங்க என்று திருப்பி திருப்பி அதையே கூறினார். ஆரி தனது குடும்பத்தை பற்றி தவறாக பேசுவதை போன்று வெளிக்காட்ட முயற்சித்தார்.

ஆரியை தவறாக காட்ட..
அதற்கு பதில் சொன்ன ஆரி, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றே தெரியாமல் எப்படி பேச வேண்டாம் என்று சொல்லலாம் என ஆரி கேட்டார். அதற்கு நீங்கள் சொல்லி முடிக்கும் வரை வெயிட் பண்ண முடியாது என்ற அனிதா அவரு என் புருஷன், என் புருஷன பத்தி நீங்க பேசக்கூடாது என ஆரியை தவறாக காட்ட முயற்சித்தார்.

கோபம் ஆட்டிட்யூட்
நீங்கள் பேசியதைதான் நான் சொல்கிறேன் தவறாக எதையும் சொல்லவில்லை என்று ஆரி மன்றாடியும், கமல் சாரே சொல்லியிருக்கார் குடும்பத்தை பற்றி பேசக்கூடாது என்று, என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நான்தான் இங்க விளையாட வந்திருக்கேன் என் அப்பா அம்மா வரல என்று வேற லெவலில் கோபத்தையும் ஆட்டிட்யூடையும் காட்டினார்.

உதட்டைக் கடித்து
கையை நீட்டி விரலை ஆட்டியும் முறைத்தும் உதட்டைக் கடித்தும் குரலை உயர்த்தியும் அனிதா பேசிய விதம் ரசிகர்களையே மிரட்டியது. இதனை பார்த்த ரசிகர்கள், அன்று அர்ச்சனா உன் கணவரை பற்றி பேசிய போது சிரித்தப்படியே கேட்டீயே என்று துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











