அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: அனிதா சம்பத் அன்பு கேங்குடன் சேர்ந்து எடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் அர்ச்சனாவை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் இதன் கொண்டாட்டம் நிகழ்ச்சி விஜய் டிவியில் காட்சியாக்கப்பட்டுள்ளது.
இதில் பிக்பாஸில் பங்கேற்ற அனைவருமே கலந்து கொண்டனர். அவர்களின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியனுடன் செல்பி
ஏற்கனவே ஆரி, அனிதா, சனம் ஷெட்டி ஆகியோரின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து ரேகா ஷிவானியுடன் எடுத்த போட்டோ, சுரேஷ் சக்கரவர்த்தியுடன் எடுத்த போட்டோ மற்றும் ரம்யா பாண்டியனுடன் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்தார்.

அர்ச்சனா, ரியோ, சோம்
இந்நிலையில் செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத், அன்பு கேங்குடன் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அன்பு கேங்கின் முக்கிய நபர்களான அர்ச்சனா, ரியோ, சோம் ஆகியோருடன் ரேகாவும் அனிதாவும் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளனர்.
இரிட்டேட்டாகுது..
அந்த போட்டோவுக்கு அன்பு என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் அனிதா சம்பத். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அர்ச்சனாவை விளாசியுள்ளனர். அன்பு கேங் அர்ச்சனாவை பார்த்தாலே இரிட்டேட்டாகுது.. பொறாமை முகம் என திட்டி தீர்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஐக்கியம் ஆயாச்சா?
அனிதா அன்பு கேங்கில் இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க எப்போ லவ் பெட்டுல சேர்ந்தீங்க என்று கேட்டு வருகின்றனர். ஐக்கியம் ஆயாச்சா? சௌக்கியமா இருந்தது.. யார் கண்ணு பட்டுச்சோ, எங்க கன்னுகுட்டிக்கு என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











