வேர்க்கடலை சாப்பிடுறவங்க யாரு? பாலாவுக்கு கொக்கிப் போட்ட கமல்.. வான்டட்டா வந்து வசமா மாட்டிய அனிதா!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்ணக் கூடாதுன்னு பாலா சொன்னது குறித்து கமல் கேட்டு, பாலாவின் ஃபியூஸை பிடுங்கினார்.

பாலா சொல்லாத பெயர்களை அனிதா சம்பத் வரிசையாக சொல்லி, கமல் கொளுத்திப் போட்டது தெரியாமல் வசமாக ஹவுஸ்மேட்களிடம் மாட்டிக் கொண்டார் அனிதா.

கமலுக்கு முன்பாகவே அனிதாவை அலறவிட்ட நிஷா, ஜித்தன் ரமேஷ்.

மிக்சருக்கு பதில் வேர்க்கடலை

மிக்சருக்கு பதில் வேர்க்கடலை

பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் மிக்சர் தின்னிகளாக இருக்கின்றனர் என்பதை ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் பயில்வான் பாலா, அந்த வார்த்தையை உபயோகப்படுத்தாமல் அதற்கு இணையான வார்த்தையாக சும்மா வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் டைட்டில் ஜெயிக்கக் கூடாது என்று பாலா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தப்பித்த பாலா

தப்பித்த பாலா

வேர்க்கடலை சாப்பிடுறவன் பிக் பாஸ் வீட்ல இருக்க லாயக்கில்லைன்னு ஏன் சொன்னீங்க பாலா? என மீண்டும் பாலா பக்கமே கமல் சாட்டையை சுழற்ற ஆரம்பித்த நிலையில், நான் எப்போ சொன்னேன் சார், சொல்லி இருப்பேன் சார், பொதுவா சொன்னேன் என யாரையும் குறிப்பிடாமல் சேஃபா தப்பித்துக் கொண்டார்.

தவளை அனிதா

தவளை அனிதா

தவளையால் தன் வாயால் கெடும் என்று சொல்வது போல, சார், நான் சொல்லட்டா சார் என கை தூக்கிய அனிதா சம்பத், சோமசேகர், கேபி, நிஷா, ஜித்தன் ரமேஷ் இவங்க நாலு பேரு தான் பிக் பாஸ் வீட்ல நல்லா வேர்க்கடலை சாப்பிடுறாங்கன்னு சொல்லி பிரச்சனையை பூதாகரமாக்கி விட்டார்.

நெருப்பு நிஷா

நெருப்பு நிஷா

அனிதா சம்பத், நிஷாவின் பெயரை சொன்னதும் நான் ஒழுங்கா தான் கால் பேசி விளையாடினேன், என ஏற ஆரம்பித்து விட்டார். கமல் சார் உடனடியாக, இது நீரா? இல்லை நெருப்பா? என கேட்டதும் நீங்க கேட்ட நிஷா சார், நெருப்பு நிஷா சார் என அனிதாவின் குற்றச்சாட்டுக்கு மறுத்து பேசினார்.

வெளுத்து வாங்கிய ரமேஷ்

வெளுத்து வாங்கிய ரமேஷ்

நீங்களே ரிசிவாரா அப்படி என்னத்த பேசி கிழிச்சிட்டீங்கன்னு கேட்ட ஜித்தன் ரமேஷ், நான் ரொம்ப கம்மியாத்தான் சார் பேகேஜ் இல்லாமல் பேசினேன் என அனிதா சொன்னதும், சார், இதுவே பேகேஜ் இல்லாமல், பேசினாங்கன்னா, அப்போ பேகேஜ்ஜோட பேசினா எப்படி இருக்கும் பாருங்க சார் என அனிதாவை ரமேஷ் வெளுத்ததும் கமல் சிரித்தே விட்டார்.

அவப்பெயர் இருக்கு

அவப்பெயர் இருக்கு

பாலாஜி முருகதாஸ் சொன்னது போல, பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் பலரும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு வேர்க்கடலை தின்பவர்களாக இருக்கின்றனர் என்கிற அவப்பெயர் பொதுவா இருக்கு, அதை புரிந்து கொண்டு மாற்றிக் கொண்டால் சரி என கமல் நேரடியாக விளாசி எடுக்காமல், அப்படியே பூசி மெழுகி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X