சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்!
சென்னை: சனம் ஷெட்டியை தொடர்ந்து அடுத்து ஒரு ஆண் மகனை அனுப்ப வேண்டும் என நினைத்து சொர்க்கபுரி அரச குடும்பத்தினர் சோமசேகரை அனுப்பினார்கள்.
ஆனால், அவர் போன வேகத்தில், சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து டக் அவுட்டாகி வந்து விட்டார்.
அரக்கர்கள் கூட்டத்திற்கு முதல் வெற்றி சோமசேகர் மூலமாக கிடைத்தது.

அரக்கர்களின் திட்டத்தை அம்பலப்படுத்திய சனம்
முதல் ஆளாக சென்று வெற்றி பெற்ற சனம் பற்றி அரக்கர் கூட்டம் ரொம்ப ஓவரா பேசிக் கொண்டிருந்த நிலையில், தனது அணியினர் யாரும் தோற்று விடக் கூடாது என்பதற்காக சனம் ஷெட்டி, அரக்கர்களின் திட்டத்தை எல்லாம் அம்பலப்படுத்தினார். ஆயுதத்தை வைத்து பயமுறுத்துவார்கள், அர்ச்சனா அக்கா கண்ணை பார்க்காதீங்க பயங்கரமா இருக்கும் என்றார்.

பர்ஸனலா அட்டாக் பண்ணுவார்
எல்லோரையும் விட சுரேஷ் சார் பர்ஸனலா அட்டாக் பண்ணுவார் அப்போ நம்ம வாய் இப்படி போகத் துடிக்கும் அதை அடக்கிக் கொள்ள வேண்டும். ரியோ உங்களுக்குத்தான் அது ரொம்ப முக்கியம் என சனம் சொன்னதும், புறாவுக்கெல்லாம் போரா ஒரே அக்கப் போறா இருக்கேன்னு காமெடி பண்ணாலும், ரியோ அதை கவனமா மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

நான் போறேன்
அடுத்து யார் போறா என கேட்டதும், உடனடியாக நம்ம பலியாடு சோமசேகர், நான் போறேன்னு தைரியமா களத்துல இறங்கினாரு. ஆனால், அவர் காட்டிய ஆர்வம் அவரது விளையாட்டில் கொஞ்சம் கூட இல்லை. போன வேகத்திலேயே அரக்கர்கள் கூட்டத்துக்கு அடிமையாகி விட்டார்.

அனிதாவுக்கு ரொம்ப வாய் ஜாஸ்திதான்
சோம சேகர் வெளியே வந்ததும் அவரை சூழ்ந்து கொண்ட அரக்கர்கள் நீ நடந்துட்ட அவுட்டாகிட்ட என ஆரம்பத்திலேயே கலாய்க்க ஆரம்பித்தனர். நம்ம மொட்டை தாத்தா ஆடுன டான்ஸ பார்த்தாலே எல்லாருக்கும் சிரிப்பு விடும் சோமசேகர் ஆரம்பத்திலேயே சிரித்துவிட்டார். டேய் சோம்பப்டி பொடிப்பயலே என அனிதா ஏகத்துக்கும் ஏசியதை பார்த்த ரசிகர்கள் உனக்கு ரொம்ப வாய் தான் என டிவியை பார்த்து திட்டத் தொடங்கி விட்டனர்.
Recommended Video

டக்கவுட்
வீரத்துடன் வெளியே வந்த சில நொடிகளிலேயே சிரித்து டக்கவுட் ஆகி விட்டார் நம்ம மங்கி சோமசேகர். அவரை அரக்கர்கள் தங்கள் இடத்திற்கு அழைத்து போய் மஞ்சள் நீராட்டு விழா செய்வது போல கரி பூசி அவரையும் அரக்கனாக மாற்றி விட்டனர். டேய், வாயிலலாம் பூசாதீங்க என கெஞ்சிய சோமசேகர் அரக்கனாக மாறியதை எண்ணி வருத்தம் கொள்ளாமல் ரொம்பவே ஹேப்பி ஆகிட்டாரு.


Click it and Unblock the Notifications











