ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா? பாலா பாணியில் அசிங்கப்படுத்திய அனிதா.. கன்ட்ரோல் பண்ணிக்கிட்ட ரியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவை அனிதா கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் பாலாஜி ஆரியை செய்தது போலவே இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க் நேற்று ஷிவானி, ஜித்தன் ரமேஷ், அனிதா ஆகியோரின் போன் காலுடன் நடைபெற்றது.

ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷின் போன் கால்கள், ஃபன்னாக இருந்த நிலையில், அனிதாவின் கால் படு கோபமாக இருந்தது. ரியோவுக்கு கால் செய்த அனிதா இதுவரை அவருடன் நடந்த பிரச்சனைகளை எல்லாம் கேட்டார்.

உச்சக்கட்ட வெறுப்பு

உச்சக்கட்ட வெறுப்பு

ஆனால் ரியோ கூறிய பதில், அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. மேலும் அடிக்கடி நான் கேட்கும் கேள்வியை புரிந்துக்கொண்டு பதில் சொல்லுங்க, உள்ளே ஒப்பீனியன் சொல்ல வரும்போது உட்கார சொல்வது போலவே இங்கேயும் பண்றீங்களே என உச்சக்கட்ட வெறுப்பை காட்டினார்.

மக்கள் மனச மாத்த பாத்தீங்களா?

மக்கள் மனச மாத்த பாத்தீங்களா?

தொடர்ந்து ரியோவிடம் காலராக பேசிய அனிதா நீங்கள் இன்டிவிஜுவல் பிளேயரா என்றார். அதற்கு ரியோ ஆமாம் நான் இன்டிவிஜுவல் பிளேயர்தான் என்று கூற, பார்க்க அப்படி தெரியவில்லை என்றார். மேலும் ஆஜித்துக்கு கால் பண்ணி பேசும் போது வீட்டில் இருந்து ஒப்பீனியன் வைக்கிறமாதிரி இருந்துச்சு வீட்டில் இருந்து ஒப்பீனியன் வைக்கிறமாதிரி மக்கள் மைண்ட மாத்தலாம்னு பார்த்தீங்களா என்றும் கேட்டு ரியோவின் பொறுமையை சோதித்தார்.

உங்களுக்குதான் கால்

உங்களுக்குதான் கால்

அதற்கு பதில் சொன்ன ரியோ, ஆஜித் வேண்டும் என்றால் மறுத்து பேசியிருக்கலாம் அவர் பேசலையே என்றார். உடனே நீங்கள் ஏன் ஆஜித்துக்கிட்ட உங்களுக்குதான் கால் பண்ண போறேன்னு சொன்னீங்க என்று கேட்டார். அதற்கு அவர் டென்ஷனாக இருந்தார், அதனால் சொன்னேன் என்றார்.

கமல் சார் கிரெடிட்

கமல் சார் கிரெடிட்

பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கின் போது யாரோ பேசிய விஷயத்தை நான் பேசியதாக கூறி நான் சண்டை போடுகிறேன் என்றீர்கள், அதற்கு நான் என்னையா என்று கேட்ட போது கூட நல்லது சொன்னா கூட எடுத்துக்க மாட்றீயேன்னு கேட்டீங்க, அந்த வாரம் கமல் சார், அதற்காக உங்களுக்கு கிரெடிட் கொடுத்தார்.

தவறான கிரெடிட்ட வாங்கிட்டீங்க

தவறான கிரெடிட்ட வாங்கிட்டீங்க

தவறான கிரெட்டிட்ட அப்படியே வாங்கிக்கிட்டீங்களே.. நீங்கள் ஏன் நான் தவறா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லல என்றார். அதற்கும் விளக்கம் கொடுத்த ரியோ, நல்லதுக்காகதான் சொன்னேன் என்றார். அதையும் ஏற்காத அனித நல்லது சொன்னால் நான் எடுத்துக்கொள்வேன் என்றார்.

ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா?

ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா?

மேலும் உங்களப் பத்தி கிரிட்டிஸிஸம் சொன்னா எடுத்துக்கமாட்றீங்க, ஹீரோவாவே இருக்க நினைக்கிறீங்களா? ஹீரோ இமேஜ்ஜ வெளியே விடாம உள்ளேயும் அப்படி இருந்துட்டு வெளியேயும் அப்படியே போகலாம்னு நினைக்கிறீங்களா? உங்கள எதிர்த்து யாரும் பேசக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா என கேள்விகளை அடுக்கினார்.

அசிங்கப்படுத்திய அனிதா

அசிங்கப்படுத்திய அனிதா

அதற்கு ரியோ பதில் சொல்ல முயன்ற போதும் நான் பேசுறத புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்லுங்க என்று அசிங்கப்படுத்தினார். மேலும் இங்கு யாரை நம்பி விளையாடுறீங்க என்றும் கேட்டார் அனிதா. அதற்கு என்னை நம்பிதான் விளையாடுகிறேன் என்றார் ரியோ. ஆனால் அதையும் ஏற்கவில்லை அனிதா.

Recommended Video

கல்யாணம் ஒரு சூதாட்டம் | ACTRESS VIMALA RAMAN CHAT PART-02 | FILMIBEAT TAMIL
டேமெஜ் பண்ணிய அனிதா

டேமெஜ் பண்ணிய அனிதா

நீங்கள் முழுசா விளையாடவில்லை என்றும், முகமூடி போட்டுருக்கேன் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் ரியோவின் முழு முகமும் தெரியவில்லை. பாதி முகத்தை மட்டும்தான் காட்டுவேன் ட்ரோஃபி கொடுங்கள் என்றால் எப்படி என்றும் கேட்டு மொத்தமாக ரியோவை டேமெஜ் பண்ணிவிட்டார் அனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X