இதுதாண்டா ரியல் ஒய் பிளட் சேம் பிளட்.. ரியோவை மட்டுமல்ல ரசிகர்களையும் வச்சு செஞ்ச அனிதா! #Anitha

சென்னை: ஒய் பிளட் சேம் பிளட் எனும் கஸ்டமர் கேர் டாஸ்க்கை நன்றாக புரிந்து கொண்டு அனிதா விளையாடினார் என்றும், அனிதா போட்ட ரம்பம் காரணமாக ரியலாகவே காதுகளில் ரத்தம் வந்தது என்றும் #Anitha வை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியிலே இந்த சீன் தான் நல்லா இருந்துச்சு என்றும் மத்தபடி மொத்த எபிசோடும் மொக்கை தான் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

ரியோவை மொத்தமாக கிழித்துத் தொங்கவிட்டார் அனிதா சம்பத் அவருக்கு ஓட்டுப்போடுங்கப்பா என்கிற அனிதா ஆர்மியனரின் குரல்களும் ஒலித்து வருகின்றன.

டிரெண்டாகும் அனிதா

டிரெண்டாகும் அனிதா

போன வாரம் நடந்த கால் டாஸ்க் இன்னமும் அப்படியே தொடர்கிறது. இதுவே ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்து வரும் நிலையில், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஆனால், அதில் ரியோவுக்கு கால் பண்ணி பேசிய அனிதா சம்பத், ரியோவை மொத்தமாக ஆஃப் செய்து விட்டார் என்று அவரது ரசிகர்கள் #Anitha வை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

அனிதா தொடர்ந்து தரமான சம்பவங்களை பிக் பாஸ் வீட்டில் பண்ணி வருகிறார் என்றும், சும்மா மிக்சர் தின்னும் கும்பலே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், அனிதா எல்லாம் இன்னும் நிறைய நாள் இருந்து செமையா விளையாடணும், அவங்களுக்கு ஓட்டுப் போடுங்கப்பா என ரசிகர்கள் கூவி வருகின்றனர். நாமினேஷன் வந்தா மட்டும் தான் அனிதா தெரிவாங்க..

வச்சி செஞ்சிட்டா

வச்சி செஞ்சிட்டா

ரியோவிடம் போனில் ஏகப்பட்ட விஷயங்களை கேட்ட அனிதா, ஒரு குட்டி ஸ்டோரியும் சொல்லி ஒட்டுமொத்தமாக இதுவரை ரியோ சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயரை எல்லாம் போட்டு உடைத்து விட்டார் என்றும், வச்சி செஞ்சிட்டா என்றும் இந்த பிக் பாஸ் ரசிகர் கமெண்ட் செய்து பாராட்டி உள்ளார்.

அடுத்த வாரம் நீதான்

அடுத்த வாரம் நீதான்

அனிதா சம்பத் அவுட்டாக வேண்டிய இடத்துல, சம்யுக்தாவை வெளியே அனுப்பிட்டாங்க.. அதுவே பிக் பாஸ் பண்ண பெரிய ஃபிராடு தனம் தான். அதுக்கு முதல் வாரமும் சுச்சி போன போது கூட அனிதா தான் கம்மியான ஓட்டு வச்சிருந்தாங்க, அனிதாவை சேவ் பண்ண பிக் பாஸ் டீம் ரொம்பவே மெனக்கெடுது என்றும், அடுத்த வாரம் வெளியேற போறது நீதான்மா என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Recommended Video

அழகினா ACTRESS SNEHA தான் | ACTRESS VIMALA RAMAN CHAT PART-01 | FILMIBEAT TAMIL
ஒய் பிளட் சேம் பிளட்

ஒய் பிளட் சேம் பிளட்

அனிதா பேசுன பேச்சுக்கு ஷிவானி மட்டுமில்ல, டிவியை ஆஃப் பண்ணிட்டு எல்லாரும் தூங்கிட்டாங்க என்றும், ரியோ ராஜ் கால் முடிந்து வெளியே வந்ததும், ரசிகர்களை பார்த்து, ஒய் பிளட் சேம் பிளட் என சொல்வது போல வேற லெவலில் அனிதாவையும் வச்சு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X