மாப்பிள்ளைக்கு தடபுடல் விருந்து வைத்த அனிதா விஜயகுமார்.. மற்றுமொரு மினி கொண்டாட்டம்!
சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தற்போது, அனிதா விஜயகுமார் மாப்பிள்ளைக்கு நட்சத்திர ஓட்டலில் தடபுடல் விருந்து வைத்துள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த மாதம் சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் விஜயகுமாரின் திருமண புகைப்படங்களும் வீடியோக்களையும் தான் பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு ஊரே அசந்து போகும் அளவிற்கு, அனிதா விஜயகுமாரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.

விஜயகுமாரின் பேத்தி திருமணம்: விஜயகுமாரின் குடும்பத்தில் மகன், மகள்கள் என பலரும் நடிகராக இருந்தாலும், அவருடைய இரண்டாவது மகள் அனிதா திரைத்துறையைத் தேர்வு செய்யாமல் படித்து மருத்துவர் ஆனார். அவர், தன்னோடு படித்த கோகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் குடியேறினார்.

காதல் திருமணம்: அனிதாவின் மகளும் தனது பெற்றோரைப் போல லண்டனில் மருத்துவம் படித்துள்ளார். இவர் தன்னுடன் படித்த தீலன் என்பவரை காதலித்த நிலையில், தனது காதலை பெற்றோருக்கு கூறி, அவர்களின் சம்மதத்துடன் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. தியாவின் வீட்டில் திருமணத்துக்காக மெஹந்தி பங்க்ஷன், சங்கீத், திருமணம், வரவேற்பு என கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் பல பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

விஜயகுமார் கொடுத்த சீர்: நடிகர் விஜயகுமார் தனது பேத்தி தியா திருமணத்துக்கு வந்த அனைவரையும் வரவேற்று திருமண வேலைகளையும் முன்னின்று செய்துள்ளார். அதே போல, தியாவின் முறை மாமன் அருண் விஜய், தியாவிற்கு ஊரே வியந்து பார்க்கும் அளவிற்கு 200 சரவனுக்கு மேல் சீர் வரிசை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த திருமணத்துக்காக அனிதா விஜயகுமார், சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்தததாகவும், இதில் வரதட்சணையாக பெரும்பகுதி தரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மினி கொண்டாட்டம்: கடந்த மாதம் தான் திருமண கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்து வரும் நிலையில், அனிதா விஜயகுமார் மாப்பிள்ளைக்கு ஷேரடோன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தடபுடலான விருந்து வைத்துள்ளார். இதில், அருண் விஜய் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளோடு கலந்து கொண்டார். மேலும், விஜயகுமார் அவரது மனைவி முத்துக்கண்ணு, ஸ்ரீஹரி, தியா, திலன் என ஒட்டுமொத்த குடும்பமும் கலந்து கொண்டது. இந்த போட்டோக்களை அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் மற்றொரு மினி கொண்டாட்டமா என கேட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











