Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அடுத்த அதிர்ச்சி.. கொரோனாவுக்கு பலியான சூர்யாவின் அஞ்சான் பட நடிகர்.. சோகத்தில் திரையுலகம்
மும்பை: ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் நடிகருமான பிக்ரம்ஜித் கன்வர்பால் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52.
நடிகர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் அப்பா கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியவர் பிக்ரம்ஜித் கன்வர்பால்.
நடுக்கடலில் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. வைரலாகும் போட்டோ!
நேற்று இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், பிக்ரம்ஜித்தும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
முன்னாள் ராணுவ வீரர்
1968ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர் பிக்ரம்ஜித் கன்வர்பால். ராணுவ வீரராக தேசத்துக்காக பாடுபட்ட அவர், கடந்த 2002ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, பாலிவுட் படங்களிலும், டிவி தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
ஷாருக்கான் படத்தில்
நடிகராக வேண்டும் என்ற தனது சிறு வயது கனவை 2003ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான பேஜ் 3 படத்தில் நடித்து தீர்த்துக் கொண்டார் இவர். தொடர்ந்து பாலிவுட் படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வந்த பிக்ரம்ஜித் கன்வர்பால் நடிகர் ஷாருக்கானின் ஜப் தக் ஹை ஜான் படத்தில் ராணுவ உயர் அதிகாரி வேடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அஞ்சான் படத்தில்
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான நடிகர் சூர்யாவின் அஞ்சான் படத்தில் நடிகை சமந்தாவின் அப்பாவாக போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருந்தார் பிக்ரம்ஜித் கன்வர்பால். சூர்யாவின் அயன், மாற்றான் மற்றும் காப்பான் படங்களை இயக்கிய இயக்குநர் கே.வி. ஆனந்த் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அஞ்சான் பட நடிகரான பிக்ரம்ஜித்தும் நேற்று கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு இந்தியாவில் 4 லட்சத்தை எட்டியுள்ளது. ஏகப்பட்ட திரைப் பிரபலங்களும், சாமானிய மனிதர்களும் கொரோனா பாதிப்பால் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜித்தும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார் என்பது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை எழுப்பி உள்ளது.