பாதுகாப்பு காரணங்களுக்காக 'அஞ்சான்' இசை வெளியீட்டு விழா ரத்து
சென்னை : இம்மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக இருந்த சூர்யாவின் 'அஞ்சான்' பட இசை வெளியீட்டு விழா, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்து செய்யப் பட்டுள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் அஞ்சான். யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை யு,.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் 22ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு இசையை வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சில பாதுகாப்புக் காரணங்கலுக்காக தற்போது இந்த இசை வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யு.டிவி நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் தனஞ்ஜெயன் கூறியதாவது :-

எதிர்பார்ப்பு...
'அஞ்சான்' படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாக இருப்பதால் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

சவாலான விஷயம்...
அதுமட்டுமன்றி, சென்னை வர்த்தக மையத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவது என்பது சாதாரணமான விஷயமல்ல. பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் கவனிக்க வேண்டும்.

சத்யம் திரையரங்கில்...
ஆகவே, 22ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் பத்திரிக்கையாளர்களுக்கும் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் ட்ரெய்லர் மற்றும் 2 பாடல்கள் திரையிட இருக்கிறோம்.

23ம் தேதி சிடி கிடைக்கும்....
அதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொள்வார்கள். 23ம் தேதி முதல் கடைகளில் படத்தின் இசை சி.டிக்கள் கிடைக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











