தமிழகத்தில் 450 திரையரங்குகளில் சூர்யாவின் அஞ்சான்!
இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாகவும் அதிக அரங்குகளிலும் வெளியாகிறது சூர்யா நடித்துள்ள அஞ்சான் திரைப்படம்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள 'அஞ்சான்' படம் சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந்தேதி ரிலீசாகிறது.

450 அரங்குகள்
இந்தப் படத்துக்கு தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சூர்யா படத்துக்கு இது அதிகபட்ச அரங்குகள் ஆகும். சென்னையில் மட்டும் 37 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

தெலுங்கில்
இதே நாளில் தெலுங்கில் சிக்கந்தர் எனும் பெயரில் வெளியாகிறது இந்தப் படம். அங்கு 100-க்கும் அதிகமான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரளாவில்
கேரளாவில் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதால், அங்கும் கணிசமான அரங்குகளில் அஞ்சான் வெளியாகிறது.

வெளிநாடுகளில்..
இங்கிலாந்தில் 58 தியேட்டர்களிலும், பிரான்சில் 25 தியேட்டர்களிலும் வெளியாகிறது. மலேசியா - சிங்கப்பூரிலும் நிறைய அரங்குகளில் அஞ்சான் வெளியாகிறது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
அஞ்சான் பட ரிலீசை சூர்யா ரசிகர்கள் பெரிய விழாவாகவே கொண்டாடுகிறார்கள். படம் திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களிலும் சூர்யா கட்-அவுட், பேனர்கள் அமைத்துள்ளனர். கொடி, தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











