சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன்.. கெட்டவார்த்தையால் திட்டுனாங்க. லிங்குசாமி பேட்டி!

சென்னை: அஞ்சான் படம் வந்த போது மோசமான கெட்டவார்த்தையால் என்னை திட்டினார்கள் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

Anjaan Director Lingusamy Emotional Interview trending on internet

இயக்குநர் லிங்குசாமி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இவர், வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அதில், வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் நான் சமமாகத்தான் பார்ப்பேன், ஏன் என்றால், சென்னைக்கு வந்த போது பத்துக்கு பத்து ரூமில், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இட்லி கடையில் கடன் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். இதே போல தேவர்மெஸ், சரவணபவன் என பல இடத்தில் கடனுக்கு சாப்பிட்டு இருக்கிறேன். அதே போல, பல நண்பர்கள் எனக்கு கடன் கொடுத்து உதவி இருக்கிறார்கள்.

மோசமான கெட்டவார்த்தை: இப்படி அடிமட்டத்தில் இருந்து வந்தவன் நான், இதனால், வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் நான் சரிசமமாக தான் பார்க்கிறேன். அஞ்சான் படம் வந்த போது படு மோசமான கெட்டவார்த்தையால் திட்டினார்கள். அதை எல்லாம் நாம் கடந்து போய் கொண்டே இருக்க வேண்டும் எங்கேயும் தேங்கி நிற்கக்கூடாது. நாம் செய்ய வேண்டியது வேலை மட்டும், சரியான ஒரு படத்தை கொடுத்துவிட்டால் போதும், அது அடுத்த படமாக இருக்கலாம்... அதற்கு அடுத்த படமாக இருக்கலாம், ஆனால், அதற்கான முயற்சியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

நண்பர்கள் என்னோடு இருக்கிறார்கள்: ஏன்டா இப்படி இருக்க எதாவது படம் பண்ணு என்று சொல்லும் வெற்றிமாறன், உரிமையோடு படம் எடு பார்த்துக்கலாம் என்று சொல்லும் விஷால் போன்ற நண்பர்கள் என்னோடு இருக்கும் போது இன்னும் எனக்கு என்ன வேண்டும். இப்படி சொல்லிக்கொண்டே போக, இன்னும் பல நல்ல விஷயம் இருக்கு என்று லிங்குசாமி அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.

பையா 2: 2010ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் லிங்குசாமி விரைவில் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கார்த்தியே நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அதர்வா தம்பி ஆகாஷ் முரளி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X