அஞ்சான் படத்துக்கு மொபைல் கேம் - தொடங்கி வைத்தார் சூர்யா
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் அஞ்சான் படத்துக்கு மொபைல் கேமை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
லிங்குசாமி இயக்கத்தில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படம் அஞ்சான். இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றன.
இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீடு 31-ம் தேதி ஹைதராபாதில் பிரம்மாண்டமாக நடக்கிறது.

மொபைல் கேம்
இந்நிலையில் அஞ்சான் படத்துக்கான மொபைல் கேம்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, லிங்குசாமி மற்றும் யுடிவி தனஞ்செயன் ஆகியோர் பங்கேற்றனர். ஹங்காமா நிறுவனம் இந்த அஞ்சான் விளையாட்டை உருவாக்கியுள்ளது.

சூர்யா
அஞ்சான் கேம்ஸை வெளியிட்டு சூர்யா பேசும் போது, "ஏற்கனவே பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் அஞ்சான் கேம்ஸ் வெளியிடுவது மகிழ்ச்சியடைகிறேன். இது குழந்தைகளை மிகவும் கவரும் என நம்புகிறேன்," என்றார்.

கார்த்தி
மேலும் கார்த்தி உடல் நலக்குறைவு பற்றிப் பேசிய சூர்யா, " உணவில் விஷம் காரணமாகவும் உடலில் நீர் சத்து குறைவாக இருப்பதாலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்.

கிண்டல்
மருத்துவமனையில் அவர் தங்கியிருக்கும் அறை எண் 420. எனக்கென்று தேர்வு செய்து இந்த அறையை கொடுத்தீர்களா என்று டாக்டர்களை கிண்டல் செய்துக் கொண்டு ஜாலியாகத்தான் இருக்கிறார்..," என்றார்.

கோச்சடையானுக்குப் பிறகு
தமிழில் ரஜினியின் கோச்சடையான் படத்துக்குத்தான் முதல் முதலில் கேம்ஸ் வெளியிட்டனர். அதன் பிறகு சூர்யா படத்துக்குத்தான் கேம்ஸ் வெளியிட்டுள்ளனர். கோச்சடையான் விளையாட்டை உருவாக்கிய நிறுவனமே அஞ்சான் விளையாட்டையும் உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











