கோலாலம்பூரில் அஞ்சான் பிரமாண்ட பிரிமியர்.. சூர்யா பங்கேற்பு!
சென்னை: அஞ்சான் படத்தின் சிறப்புக் காட்சி மலேசியத் கோலாலம்பூரில் நடக்கிறது.
ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு நடக்கும் இந்தக் காட்சியில் படத்தின் நாயகன் சூர்யா உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள முதல் படமான அஞ்சான் பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

3 மில்லியன்
இந்தப் படத்தின் டீசருக்கு இணையத்தில் 3 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ட்ரைலர்
ஆகஸ்ட் 15-ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள அஞ்சான் படத்தின் ட்ரைலர் வரும் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் இந்த ட்ரைலர் வெளியிடப்படுகிறது. அன்றே தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும் ட்ரைலர் திரையிடப்படும்.

கோலாலம்பூரில்
படம் வெளியாகும் தினத்துக்கு ஒரு நாள் முன்பாக, அஞ்சான் படத்தின் சிறப்புக் காட்சி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திரையிடப்படுகிறது.

நட்சத்திரப் பட்டாளம்
படத்தின் நாயகன் சூர்யா, நாயகி சமந்தா, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த காட்சியில் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











