Anjaan Re Release BOX Office: இரண்டாவது நாளே பெரிய சம்பவம்.. சூர்யா ரசிகர்கள் விட்டுக் கொடுக்காம இருக்காங்களே!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ரீ எடிட் செய்து படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் ரீ ரிலீஸ் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இயக்குநர் லிங்குசாமி எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், தயாரிக்கவும் செய்த படம் அஞ்சான். படத்தில் சூர்யா, சமந்தா, வித்யூ ஜமால், சூரி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். நா. முத்துக்குமார் எழுத்தில் உருவான பாடல்கள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியான காலகட்டத்தில் பெரிய வெற்றியை ஈட்டித் தரவில்லை. சுமார் ரூபாய் 60 கோடிகளுக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் அப்போது ரூபாய் 62 கோடிகள் தான் வியாபாரம் செய்துள்ளது. இன்றைக்கு போல ஓடிடி பிசினஸ் அப்போது இல்லை.

இந்நிலையில் படத்தை ரீ எடிட் செய்து ரீ ரிலீஸ் செய்துள்ளார் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி. படத்தின் ரீ எடிட்டில் நடிகர் சூரியின் காமெடி காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டதாகவும், படத்தில் தேவையில்லாமல் இருந்த காட்சிகளையும் நிக்கி விட்டதாகவும் தெரிவித்தார். குறிப்பாக படத்தின் நீளத்தை சுமார் 2 மணி நேரத்திற்கு குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ரீ எடிட்: படம் பார்த்த ரசிகர்களுக்கு இந்த ரீ எடிட் வெர்ஷன் மிகவும் பிடித்துப் போகவே, படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். சூர்யாவுக்கு வழக்கமாகவே பெண் ரசிகர்கள் அதிகம். தியேட்டரில் பெண் ரசிகர்களும் ஆட்டம் போட்டு படத்தின் ரீ ரிலீஸைக் கொண்டாடி வருகிறார்கள். படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 75 லட்சம் வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் ரூபாய் ஒரு கோடி வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும் இன்று வார இறுதி நாளில் படத்தின் வசூல் என்பது மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறது படக்குழு. படத்தின் ரீ எடிட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் படத்தின் வசூலில் அது கட்டாயம் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. முதல் இரண்டு நாளில் படம் கிட்டத்தட்ட ரூபாய் ஒரு கோடியே 75 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











