தனுஷ், கீர்த்தி சுரேஷ் புது படங்களை பாக்ஸ் ஆபீஸில் ஓடவிட்ட அஞ்சான் ரீ ரிலீஸ்.. இப்படி ஆகிப்போச்சே!

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ரிவால்வர் ரீட்டா, தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் தேரே இஷ்க் மே உள்ளிட்ட படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியாகின. இவ்விரண்டு படங்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால் சுமாரான வரவேற்பையே பெற்றது. வசூலிலும் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. அதேசமயம் இந்த இரண்டு படங்களைவிடவும் சொல்லிக்கொள்ளும்படியான வசூலை ரீ ரிலீஸான அஞ்சான் பெற்றிருக்கிறது.

கோலிவுட்டில் நேற்று மொத்தம் பத்து படங்கள் ரிலீஸாகின. இவற்றில் அஜித் நடித்த அட்டகாசம், சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய இரண்டு படங்களும் ரீ ரிலீஸாகின. புது படங்களை பொறுத்தவரை தனுஷ் நடித்திருக்கும் தேரே இஷ்க் மே, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரிவால்வர் ரீட்டா ஆகிய இரண்டு படங்களும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருந்தன. ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றார்கள்.

தேரே இஷ்க் மேவுக்கு அடி: தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட தேரே இஷ்க் மே படம் கோலிவுட் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. தனுஷின் நடிப்பில் தெரிந்த ரஜினியின் சாயல்; பழைய காலத்து காதல் கதை; சரியில்லாத திரைக்கதை என்று படம் மொத்தமாகவே படுத்துவிட்டது. படத்தின் ஒரே ஆறுதலாக இருந்தது ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும், பின்னணி இசையும் மட்டும்தான். மற்றபடி படத்தில் எதுவுமே இல்லை என்பதுதான் அனைவரின் கருத்தும்.

Anjaan Re-Release Surprises Box Office Outperforms Dhanush Tere Ishn Mein Keerthy Suresh Revolver Rita
Photo Credit:

ரிவால்வர் ரீட்டா சுடவே இல்லை: தேரே இஷ்க் மே படம்தான் இப்படி என்றால் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா அதைவிட மோசமாகிவிட்டது. டார்க் காமெடி ஜானரில் உருவாக்கப்பட்ட படத்தில் லாஜிக் என்பதே சுத்தமாக இல்லை. கீர்த்தி சுரேஷும், ராதிகாவும் மட்டும் இல்லையென்றால் இப்படம் துளிகூட தேறியிருக்காது. இரண்டு பேரும் நடிப்பில் அட்டகாசப்படுத்திவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இரண்டு படங்களும் மோசமான தோல்வியை சந்திக்க ஆரம்பித்திருக்கின்றன.

அஞ்சான் ரீ ரிலீஸ்: இது ஒருபக்கம் இருக்க சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படம் ரீ எடிட் செய்யப்பட்டு மீண்டும் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. முன்னர் வாங்கிய அடி போல் இந்த முறை படத்துக்கு விழாது என்பது இயக்குநரின் ஆழமான நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. படம் பார்த்தவர்கள் இதை ஏன் ட்ரோல் செய்து தோற்கடித்தார்கள் என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

ஓடவிட்ட அஞ்சான்: ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கும் அஞ்சான்; புதிதாக வெளியான தேரே இஷ்க் மே, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களைவிடவும் சொல்லிக்கொள்ளும்படியான வசூலை முதல் நாளில் பெற்றிருக்கிறது. அதாவது இப்படம் முதல் நாளில் 72 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ரிவால்வர் ரீட்டா 65 லட்சம் ரூபாயையும், தேரே இஷ்க் மே தமிழில் 75 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருக்கிறதாம். ரீ ரிலீஸாகி புது படங்களை வசூலில் ஓடவிட்ட அஞ்சான் ஆச்சரியத்தைத்தான் கொடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X