தெலுங்கில் ‘சிக்கந்தர்’ ஆன சூர்யாவின் அஞ்சான்!

சென்னை: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் அஞ்சான். இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இசை யுவன் சங்கர் ராஜா.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடன் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்காக சக்சஸ் மீட் கூட வைக்கப் பட்டது.

இந்நிலையில், இப்படம் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

தமிழில் இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் எதையும் தராத சமந்தா, தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். எனவே, இப்படம் அங்கு வியாபார ரீதியாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நல்ல கதாபாத்திரம்...

நல்ல கதாபாத்திரம்...

சமந்தாவும் இப்படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காரணம் சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மினுக்கு கொடுத்தது போல், இப்படத்தில் தனக்கு நல்ல கதாபாத்திரத்தை லிங்குசாமி கொடுத்திருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

இசை வெளியீடு...

இசை வெளியீடு...

அஞ்சான் படம் மூலம் பாடகராகியுள்ளார் சூர்யா. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. நடிகர் கமல் பாடல்களை வெளியிடுகிறார்.

ரிலீஸ்....

ரிலீஸ்....

ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பெயர்க்காரணம்...

பெயர்க்காரணம்...

இப்படத்தில் சூர்யாவிற்கு பிளாஷ் பேக் கதை ஒன்று உள்ளதாகவும், அதில் அவரது பெயர் சிக்கந்தர் என்றும் கூறப்படுகிறது. எனவே, தான் தெலுங்குப் படத்திற்கு சிக்கந்தர் எனப் பெயரிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்ச்...

பஞ்ச்...

இப்படத்தில் 'பட்டாசு சத்தத்துக்கு பறந்துபோற புறான்னு என்னை நீ நினைக்கிற. ஆனா நான் இரைக்காக காத்திருந்து பிடிக்கிற கழுகுடா... அஞ்சான்' என சூர்யா பஞ்ச் பேசுகிறார். தெலுங்கிலில் இந்த கழுகிற்கு வரவேற்பு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X