ஒரே மாதிரி டிசைனில் அஞ்சானும் அனேகனும்!

By Shankar

Anjaan title design similar to Anegan
கோலிவுட்டில் இன்று பரபரப்பைக் கிளப்பியிருப்பது அஞ்சான் மற்றும் அனேகன் படங்களின் தலைப்புகள் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டிருப்பதுதான்.

எந்த டிசைனை யார் காப்பியடித்தார்கள் அல்லது இருவருமே எதைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்று பலரும் கமெண்ட் அடிக்கும் அளவுக்குப் போய்விட்டது நிலைமை.

தலைப்பை டிசைன் பண்ணுவதற்கு இன்றைக்கு தமிழ் சினிமாக்காரர்கள் ஏக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பல நாட்டுப் படத் தலைப்பு வடிவமைப்பை ரெஃபரன்ஸுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத் தலைப்பு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் நடிக்கும் அஞ்சான் படத் தலைப்பு வடிவும் நேற்று வெளியாகியுள்ளது. இதுவும் பார்க்க வித்தியாசமாக, நன்றாக உள்ளது.

ஆனால் இதற்கு சில மாதங்கள் முன்பே கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் படத் தலைப்பு வடிவம் வெளியாகியிருந்தது.

இந்த இரண்டு தலைப்பு டிசைன்களும் அச்சு அசலாக ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன.

முன்பே குறிப்பிட்டது போல, எந்த டிசைனை யார் காப்பியடித்தார்கள்? அல்லது இருவருமே எதைப் பார்த்து காப்பியடித்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது சந்தேகம்தான்.

சரி, யார் முதலில் டிசைனை மாற்றப் போகிறார்கள்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X