பாலியல் தொல்லை.. முகத்தில் ஆசிட் அடிப்பேன் என மிரட்டுகிறார்.. காதலர் பற்றி 'பேரன்பு' அஞ்சலி புகார்
வாழ்க்கை துணை தன்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததாக நடிகை அஞ்சலி அமீர் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: தனது காதலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆசிட் அடிப்பேன் என மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை அஞ்சலி அமீர்.
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மாடல் மற்றும் நடிகை அஞ்சலி அமீர். திருநங்கையான இவர், நிறைய மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா நடித்த பேரன்பு படத்தில் அஞ்சலி அமீரும் நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் திருநங்கையாகவே நடித்திருந்தார். மேலும், அந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடி அவர் தான் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

அஞ்சலி அமீர் பயோபிக்
அஞ்சலி அமீர் தற்போது அவரது வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டும் மே மாதம் அப்படத்தை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.
பேஸ்புக் நேரலை
அஞ்சலி அமீர் சமூக வலைதளங்களில் தீவிரவாக இயங்கக் கூடியவர். சமீபத்தில் அவர் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றி, கதறி அழுதபடி பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

லிவ்விங் டுகெதர் பார்ட்னர்
அப்போது அவர் தான் ஒரு நபருடன் சில காலம் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாகக் கூறினார். அந்த நபர் தன்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததாகவும், மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சி
இதனால் மனமுடைந்து ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே தனது வாழ்க்கை துணையை பிரிந்துவிட்டதாகக் கூறிய அஞ்சலி, தன்னை பிரிந்து சென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும், முகத்தில் ஆசிட் அடிப்பேன் என்றும் காதலர் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

போலீஸ் புகார்
கைசெலவுக்கூட தன்னையே நம்பியிருந்த காதலர், தன்னிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பெற்றிருப்பதாகவும் அஞ்சலி குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் உள்பட தனக்கு ஆதரவாக யாருமே இல்லை எனக் கூறி கதறி அழுத அஞ்சலி, காதலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

காதலர் யார்?
மலையாள சினிமா மற்றும் மாடலிங் துறையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் அஞ்சலி அமீரின் இந்த நேரலை வீடியோ மல்லுவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அஞ்சலி முன்வைத்தாலும், அவர் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











