Anjali - பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த இயக்குநர்.. கடுப்பான நடிகை அஞ்சலி
சென்னை: Anjali (அஞ்சலி) அங்காடித் தெரு படத்தின் ஷூட்டிங்கில் இயக்குநர் வசந்தபாலன் மீது அஞ்சலி கடுமையாக கோபம் கொண்டார் என கூறப்படுகிறது.
கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. ராம் இயக்கி ஜீவா நடித்திருந்த அந்தப் படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு க்ளாசிக்காக இருந்ததை அடுத்து முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார் அஞ்சலி.

முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன. அதன்படி அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக்கொண்டே சென்ற அஞ்சலி மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனந்தி, கனி: அஞ்சலி நடித்த படங்களில் தன்னுடைய கேரக்டரை எப்போதும் பேச வைத்துவிடுவார். குறிப்பாக கற்றது தமிழ் படத்தில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நிஜமாதான் சொல்றியா என அவர் கேட்கும் இடத்தில் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கிறங்கிப்போயினர்.
கற்றது தமிழில் தனது நடிப்பை நிரூபித்த அஞ்சலிக்கு அடுத்த முக்கியமான படம் அங்காடித் தெரு. கனி என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். குறும்பான பெண்ணாக படத்தில் வலம் வரும் அஞ்சலி ஒரு சங்கடமான சூழ்நிலையை ஹீரோவிடம் சொல்லும்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பால் கலங்கடித்திருப்பார். அந்தப் படம் அஞ்சலியின் கரியர் பெஸ்ட் படங்களில் ஒன்று.
காணாமல் போன அஞ்சலி: இப்படி பல படங்களில் தன்னுடைய நடிப்பில் ஸ்கோர் செய்த அஞ்சலி தெலுங்குக்கும் சென்றார். ஆனால் திடீரென அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக தமிழ் சினிமாவிலிருந்து சில காலம் காணாமல் போனார். அதனையடுத்து சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரீ என்ட்ரி கொடுத்த அஞ்சலி அடுத்ததாக ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் உள்ளிட்ட படத்தில் நடித்தார். இருப்பினும் அவருக்கு பழையபடி வாய்ப்புகள் சரளமாக கிடைக்கவில்லை
ராம் இயக்கத்தில்: கடைசியாக ஹாட்ஸ்டாரில் வெளியான ஃபால் என்ற வெப் சீரிஸில் நடித்த அவர் இப்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படம் மூலம் எப்படி தன்னை மிகச்சிறந்த நடிகையாக அடையாளப்படுத்தினாரோ அதேபோல் ஏழு கடல் ஏழு மலை படமும் தனக்கு மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுக்கும். இதன் மூலம் அடுத்த ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் அஞ்சலி இருக்கிறார். மேலும் தனது 50ஆவது படமாக ஈகை என்ற படத்திலும் நடிக்கிறார். இதன் பூஜை சமீபத்தில் நடந்தது.
பிச்சைக்காரர்களுடன் படுத்த அஞ்சலி: இந்நிலையில் அங்காடித் தெரு படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் வசந்தபாலன் மீது அஞ்சலிக்கு கடுமையாக கோபம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் படம் ரியலாக வர வேண்டும் என்பதற்காக அஞ்சலியை சாலையில் யாசகம் பெறுபவர்களுடன் படுக்க சொல்லியிருக்கிறார். இவரும் கோபத்தை பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். ஆனால் படம் வெளியாகி அந்தக் காட்சிகளை பார்த்த பிறகு பட்ட கோபம் எல்லாம் மறைந்து போயிருக்கிறது அஞ்சலிக்கு. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











