நான் ரெடியாதான் இருக்கேன்.. என்னோட "சைலன்ஸ்" மிரட்டும்.. அடடே அஞ்சலி!

சென்னை: அடுத்த மாதம் வெளியாகவுள்ள சைலன்ஸ் படத்தையே நம்பி இருக்கிறார் அஞ்சலி. இந்த பட தமிழில் ஒரு கம்போக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்.

Recommended Video

Sneha reveals Daughter photo | Suja Varunee | Kushbhu | Varalakshmi sarathkuamar Womens Day

திரைப்படங்கள் ஒரு பெரிய உருவம் பெறுவது சிறிய குறும்படத்தில் இருந்து தான். அது போல குறும்படத்தில் நடித்து கொண்டு இருந்தவர் ஹீரோயின் ஆக அறிமுகமானார் அஞ்சலி.

தனது கல்லூரி படிப்பில் இருந்தே குறும்படங்களில் அதிகம் நடித்து வந்தார் அஞ்சலி. அப்படி நடித்து வந்து கொண்டு இருந்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு படமான போட்டோ மற்றும் பிரேமாலேகா ராசா படங்களில் நடித்தார்.

ஆனந்தி

ஆனந்தி

ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் நடித்து இன்று வரை நம் இதயங்களில் ஆனந்தியாக வாழ்ந்து வருகிறார் அஞ்சலி. இப்படத்தில் அவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பதை விட ஆனந்தியாகவே மாறினார் என்று சொல்லலாம். வசந்த பாலன் இயக்கிய அங்காடிதெரு படத்தில் நடித்தன் மூலம் அனைவரும் விரும்பும் நாயகியாக மாறினார் அஞ்சலி.

 நல்ல கதாபாத்திரம்

நல்ல கதாபாத்திரம்

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், பல விருதுகளை குவித்தது. இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்து இருப்பார். இந்தப்படத்திலும் இவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரமே கிடைத்து. அங்காடி தெரு படத்திற்கு பிறகு இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது.

 தொடர் சரிவு

தொடர் சரிவு

மேலும், இப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுதை பெற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மாறி மாறி நடித்து வந்தாலும் இவருக்கு இதற்கு முன்பு கிடைத்த வரவேற்பு தற்பொழுது கிடைக்கவில்லை. கடந்த வருடம் அஞ்சலி நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகின அதில் பேரன்பு, நாடோடிகள் 2 தவிர மற்ற அனைத்து படங்களும் கலவையான விமர்சனங்களையே சந்தித்தன.

 நல்ல மார்க்கெட்

நல்ல மார்க்கெட்

தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி, பவன் கல்யாண் உடன் ஒரு படம் மற்றும் பாலகிருஷ்ணா உடன் ஒரு திரைப்படம் என வரிசையாக படங்கள் வைத்துள்ளார். மேலும், இவ்விரு திரைப்படங்களும் அவருக்கு அங்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தி கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

கம்பேக்

கம்பேக்

மேலும் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் தயாராகி வரும் சைலன்ஸ் திரைப்படம் தனக்கு மீண்டும் தமிழில் ஒரு கம்போக் படமாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறார் அஞ்சலி. இதில் இவர் மட்டுமல்லாது அனுஷ்கா, மாதவன், ஷாலினி பாண்டே போன்ற பலரும் நடித்துள்ளனர் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X