அஞ்சலி விவகாரம்- களஞ்சியத்துக்கு எதிராக திமுக, காங். சதியாம்!

By Shankar

Kalanjiam and Anjali
சென்னை: நடிகை அஞ்சலி விவகாரத்தில், தனக்கு எதிரான திமுகவும் காங்கிரஸ் கட்சியும் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் மு களஞ்சியம்.

தனது சித்தியுடன் சேர்ந்து தன்னை துன்புறுத்தி வருகிறார் களஞ்சியம் என்றும், தன் சொத்துகளை அபகரித்துவிட்டார் என்றும் நடிகை அஞ்சலி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

பின்னர் சில தினங்கள் காணாமல் போய், மீண்டும் போலீஸ் முன் ஆஜரான அவர், தன் குறறச்சாட்டில் உறுதியாக இருந்தார்.

இதனால் கடுப்பான களஞ்சியம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்துள்ளார்.

இந்தநிலையில் நாகர்கோவிலில் இன்று அவரது தமிழர் நலம் இயக்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த களஞ்சியம் நிருபர்களிடம் கூறுகையில், "நடிகை அஞ்சலி விவகாரம் அவரது குடும்பப் பிரச்சினை. அவர் வீட்டை விட்டு ஓடிப் போய் தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் புகார் சொல்வது அர்த்தமற்றது.

நான் அஞ்சலியை கொடுமை செய்ததாகவும், சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.

அஞ்சலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக கோர்ட்டில் அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்து உள்ளேன். நீதிமன்றத்திலும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்னுடைய தமிழர் நலம் பேரியக்க அமைப்பு பாடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவராக நான் உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. மீதும், காங்கிரஸ் அரசு மீதும் நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இதனால் அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

அஞ்சலி அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விட்டார், சேற்றை என் மீது மட்டுமின்றி எனது அமைப்பினர் மீதும் வீசி உள்ளார். தற்போது 'ஊர் சுற்றும் புராணம்' படத்தில் நான் கதாநாயகனாகவும், அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்து வருகிறோம். இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாளில்கூட என்னுடன் அஞ்சலி வேலை பார்த்தார்.

இந்த படத்துக்கான அடுத்த கால்ஷீட்டை அஞ்சலி வருகிற 24-ந் தேதி கொடுத்துள்ளார். அன்றைய தினம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காவிட்டால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் செய்வேன்.

ஆனால் நடிக்க வந்தால் இணைந்து நடிப்பேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X