மாப்பிள்ளை சிங்கம்.. மீண்டும் விமல்- அஞ்சலி ஜோடி
மாப்பிள்ளை சிங்கம் படத்துக்காக மீண்டும் விமலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அஞ்சலி.
குடும்பப் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட காணாமல் போயிருந்த அஞ்சலி, மீண்டும் முழு வீச்சில் களமிறங்கியுள்ளார்.
ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்கும் அவர், அடுத்து விமலுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஏற்கெனவே இருவரும் தூங்கா நகரம் படத்தில் நடித்தார். கலகலப்பு படத்திலும் இவர்தான் விமலுக்கு ஜோடி. இது மூன்றாவது படம்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விமலின் நண்பனாக வருகிறார் சூரி. அறிமுக இயக்குனர் ராஜசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
டி.இமான் இசையமைக்க படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் ராஜசேகர். முழுநீள காமெடிப் படமாக இது உருவாகிறது.


Click it and Unblock the Notifications











