காலையிலேயே மேக்கப் போட்டுக்கிட்டு.. நடுரோட்டில் இப்படி ஓடுறாரே அஞ்சலி.. என்ன விஷயமா இருக்கும்?

சென்னை: அதிகாலையிலேயே மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு நடிகை அஞ்சலி நடுரோட்டில் ஓடும் போட்டோக்களை பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி.

அனுஷ்கா, மாதவன் நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் நிசப்தமாகவே முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

நடுரோட்டில் ஓடும் அஞ்சலி

நடுரோட்டில் ஓடும் அஞ்சலி

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. போட்டோ எனும் தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை அஞ்சலி, தனது ட்விட்டர் பக்கத்தில் நடுரோட்டில் ஓடும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மலை பிரதேசம் ஒன்றில் சுற்றுலா செய்து வரும் நடிகை அஞ்சலி, கருப்பு நிற ஜிம் ஷூட் அணிந்து கொண்டு அதிகாலை உடற்பயிற்சியான ரன்னிங் செய்யும் போட்டோக்களைத் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Live, Laugh, Run என்கிற அழகான தத்துவ கேப்ஷனையும் கூடவே கொடுத்துள்ளார்.

அழகா சிரிக்கிறீங்க

அழகா சிரிக்கிறீங்க

நீண்ட கேப்பிற்கு பிறகு மீண்டும் அஞ்சலியின் அழகான போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் ரொம்ப அழகா சிரிக்கிறீங்க என அஞ்சலியை வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை அவரது ட்வீட்டுக்கு கீழே பதிவிட்டுள்ளனர். மேலும், அஞ்சலியின் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

மேக்கப் போட்டுக்கிட்டு

மேக்கப் போட்டுக்கிட்டு

ஆனால், சில குறும்புக்கார நெட்டிசன்கள், மார்னிங் ரன்னிங்கிற்கு கூட ஏன் லிப்ஸ்டிக், மேக்கப்னு இப்படி போட்டோவுக்காக ஓடுறீங்க, ஓடுவதே வியர்க்கத் தான் ஆனால், அது எந்த போட்டோவிலும் தெரியலையேன்னு பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். சிலர், பார்த்து ஓடுங்க கீழ விழுந்து அடிபடப் போகுது என நக்கலாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில்

போனி கபூர் தயாரிப்பில்

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை எனும் பெயரில் தயாரித்த போனி கபூர், அதே படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து வக்கில் சாப் எனும் பெயரில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் லீடு ரோலில் நடிகை அஞ்சலி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

Recommended Video

CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL
லெஸ்பியன் முத்தம்

லெஸ்பியன் முத்தம்

சமீபத்தில் வெளியான நெட்பிளிக்ஸின் பாவக் கதைகள் ஆந்தாலஜியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான லவ் பண்ணா விட்றணும் கதையில் டபுள் ரோலில் அஞ்சலி நடித்து மிரட்டி இருந்தார். பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் உடன் அஞ்சலி அடித்த லெஸ்பியன் முத்தக் காட்சி எல்லாம் வேற லெவலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X