Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
திகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
Recommended Video
சென்னை : நடிகை அஞ்சலி 'நாடோடிகள் 2', விஜய் சேதுபதி ஜோடியாக இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இதுதவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்படவிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், 'லிசா' எனும் திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஞ்சலி. ஜெய், அஞ்சலி இணைந்து நடித்த 'பலூன்' என்ற பேய்ப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஞ்சலி.
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். 'லிசா' படத்தில் அஞ்சலி பேயாக நடிக்கவுள்ளார். சற்று முன்பு ட்விட்டரில் 'லிசா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திகில் படமாக உருவாகவிருக்கும் 'லிசா' படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக்க உள்ளனர் . ஸ்டீரியோஸ்கோபிக் தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்தியப் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Here it is @yoursanjali as LISAA. #ANJALIasLISAA @Pgmediaworks @irajuviswanath @dhayasandy @editorgowtham @MuthaiahG @itsjosephjaxson @onlynikil #CtcMediaboy pic.twitter.com/mzrBeAWnDZ
— PG Media Works (@Pgmediaworks) May 21, 2018
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, படத்தொகுப்பாளராக கெளதம் பணியாற்றுகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.