twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஞ்சலியின் கிராமத்தில் குவியும் மக்கள், பத்திரிக்கையாளர்கள்... !

    By Sudha
    |

    Anjali's village lures more people after she went missing
    ஹைதராபாத்: நடிகை அஞ்சலி விவகாரம் வெளியே வெடித்ததைத் தொடர்ந்து ஆந்திராவில் உள்ள அவரது கிராமம் பெரும் பரபரப்பாகவே காணப்படுகிறது. அக்கம் பக்கத்து ஊர் மக்களும், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் என சகலரும் குவிந்து வருகின்றனர். இதனால் சிறிய கிராமமான அந்த ஊர் பரபரப்பாக காணப்படுகிறது.

    ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பாலதிரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் கொண்ட அஞ்சலி. அவரை செல்லமாக பாலா, பாலா என்றுதான் அழைப்பார்களாம். கிராமத்தினரும் கூட பாலா என்றுதான் செல்லமாக சொல்கின்றனர்.

    அஞ்சலிக்கு ரவிசங்கர், பாபுஜி என இரு அண்ணன்கள். யாமினி தேவி என்ற ஒரு அக்காளும் இருக்கிறார். பாபுஜி சொந்த ஊரான மொகல்புதூர் கிராமத்தில் வசிக்கிறார். அஞ்சலியின் தாத்தா - அதாவது தாய்வழி தாத்தா - அப்பாராவும் அதே கிராமத்தில்தான் வசிக்கிறார்.

    அஞ்சலி விவகாரம் சூடு பிடித்ததைத் தொடர்ந்து பலரும்கிராமத்துக்கு வந்து போகின்றனர். போலீஸார், அக்கம் பக்கத்து கிராமத்தினர், பத்திரிக்கையாளர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் வந்து போவதால் கிராமமே பரபரப்பாக காணப்படுகிறது.

    நேற்று பாபுஜியுடனும் பேசியுள்ளார் அஞ்சலி அப்போது தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறினாராம். இதற்கு பாபுஜி, சித்தி சண்டை போடுவது சகஜம்தான். அதற்காக நீ யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எங்கேயாவது போய் விடுவதா? நீ இங்கே கிராமத்துக்கு வந்தாலும் சரி; அல்லது ஹைதராபாத்தில் உள்ள அண்ணன் ரவி சங்கரிடம் போனாலும் சரி; அல்லது சித்தி வீட்டுக்கு போனாலும் சரி... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எங்கே இருந்தாலும் பத்திரமாக இருந்தால் சரிதான் என்றாராம்.

    Read more about: anjali அஞ்சலி
    English summary
    Actress Anjali's native village in Andhra Pradehs is luring more people after she went missing from a Hyderabad hotel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X