இதுதான் அந்தப் படத்தோட கடைசி நாள் ஷூட்ல எடுத்தது.. அனுஷ்காவுடன் அஞ்சலி எடுத்த சியாட்டில் போட்டோ!
சென்னை: அந்த படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோவை, நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.
அதே போல இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார் அஞ்சலியும். இவர்கள் இணைந்து படம் ஒன்றில் நடித்துள்ளனர்.

தமிழில் சைலன்ஸ்
மாதவன் ஹீரோவாக நடித்துள்ள அந்தப் படம் நிசப்தம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் அதற்கு சைலன்ஸ் என்று டைட்டிலை மாற்றியுள்ளனர். மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர்.

ரசிகர்கள் ஏமாற்றம்
கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவின் லுக் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் அப்போது ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

லாக்டவுன்
பிறகு ஜனவரி 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து பிப்ரவரி 20 ஆம் தேதி ரிலீஸ் என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. அந்த தேதியிலும் படம் ரிலீஸ் ஆகவில்லை. பிறகு ஏப்ரலில் ரிலீஸ் பண்ண முடிவு செய்திருந்தனர். லாக்டவுன் காரணமாகத் தள்ளிப் போயுள்ளது.

த்ரோபேக் போட்டோ
இந்நிலையில் இந்தப் படத்தின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, த்ரோபேக் போடோவாக நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரில் எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் நடிகை அனுஷ்கா மற்றும் போலீஸ்காரர்களாக நடித்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதற்கு கமென்ட் அடித்துள்ள ரசிகர்கள், இது மேடி (மாதவன்)யை காணலையே ஏன்? என்று கேட்டுள்ளனர். இதில் அஞ்சலி, மஹா என்ற டிடெக்டிவாக நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











