நடிகை அஞ்சலி கொரோனா மறுப்பு.. ஏன் இப்படி கிளப்பி விடுறீங்க.. பதறிப் போன அஞ்சலி.. அதிரடி விளக்கம்!

சென்னை: எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன் என நடிகை அஞ்சலி ட்வீட் போட்டு விளக்கி உள்ளார்.

நாடு முழுவதும் இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பு மக்களை மீண்டும் வச்சு செய்ய ஆரம்பித்துள்ளது.

மீண்டும் ஒரு பெரிய லாக்டவுன் போடப்படுமா? என்கிற அச்சத்தில் மக்களும் பிரபலங்களும் உள்ளனர்.

எனக்கு கொரோனா இல்லை

எனக்கு கொரோனா இல்லை

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை அஞ்சலி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், தான் நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளதாகவும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொரோனா வதந்தி

கொரோனா வதந்தி

நடிகை அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பொய்யான தகவல் ஒன்று பரவி உள்ளது. அதனை அறிந்த நடிகை அஞ்சலி உடனடியாக தனது தரப்பு விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலமாக அறிவித்துள்ளார்.

முற்றிலும் பொய்

முற்றிலும் பொய்

தனக்கு கொரோனா பாதித்ததாக வந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என்றும் தனது ரசிகர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம் என்றும் நடிகை அஞ்சலி தெளிவாக விளக்கி உள்ளார். கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கி உள்ள நிலையில், பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா பரவி விட்டதாக போலியான தகவல்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

காதல் தோல்வி

காதல் தோல்வி

சமீபத்தில் நடிகை அஞ்சலி தான் காதலித்ததாகவும், ஆனால், அந்த காதல் தோல்வியில் முடிந்ததாகவும், காதலில் வெற்றிப் பெற்று இருந்தால் பெருமையாக வெளியே சொல்லி திருமணத்தையும் கோலாகலமாக நடத்தி இருப்பேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பிய நிலையில், நடிகை அஞ்சலிக்கு கொரோனா என கிளப்பி விட்டுள்ளனர்.

Recommended Video

மாலத்தீவில் ஹனிமூனை கொண்டாடும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடி | Tamil Filmibeat
வக்கீல் சாப்

வக்கீல் சாப்

பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தில் லீடு ரோலில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார். நாளை வெளியாகும் அந்த படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஆனந்த பைரவி, பூச்சாண்டி, சிவப்பு, பீஷ்ம பர்வம் என தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X