Ratan Tata Death: ஒரே சூரியன்.. ஒரே சந்திரன்.. ஒரே டாடா.. அஞ்சலி முதல் அஜய் தேவ்கன் வரை இரங்கல்
சென்னை: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. டாட்டா குழுமத்திற்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே ரத்தன் டாட்டாவின் மறைவு பேரிழப்பு என முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும், தொழிலதிபர்களும் ரத்தன் டாடாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஜய் தேவ்கன் முதல் நடிகை அஞ்சலி வரை ரத்தன் டாடாவின் மரண செய்தி அறிந்து என்னவெல்லாம் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறித்து இங்கே காணலாம்.
ரத்தன் டாடா மறைவு: 1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்த ரத்தன் டாடா தனது வாழ்நாளில் தொழில் துறையில் செய்யாத சாதனைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி உள்ளார். ஒரு சகாப்தமே சரிந்து விட்டது என்றும் ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே டாடா மறைந்து விட்டார் என்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல்கள் வெளியான போது கூட அது உண்மையில்லை என மறுத்த ரத்தன் டாடா உடல்நலம் பெற்று மீண்டு வருவேன் என்கிற நம்பிக்கையுடன் இருந்த நிலையில், மருத்துவமனையில் நேற்று இரவு அவரது உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது.

மு.க. ஸ்டாலின் இரங்கல்: இந்திய தொழிலதிபர்களிலேயே டைட்டனாக வாழ்ந்த ரத்தன் டாடாவின் மறைவு செய்தி அறிந்து மனம் மிகவும் வேதனையில் வாடுகிறது. இந்தியா ஒரு மிகப்பெரிய ஆளுமையை இழந்து விட்டது. ஆனால், அவருடைய ராஜ்ஜியம் என்றுமே அழியாமல் தொடரும் என மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி இரங்கல்: ரத்தன் டாடாவின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில், "An icon. A legend. Thank you for inspiring us sir. You will be remembered forever" என பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்த ஒரு லெஜண்ட் மறைந்து விட்டார் என பதிவிட்டுள்ளார்.

அஜய் தேவ்கன் இரங்கல்: இந்தியாவிற்கு அவர் அளித்த பங்களிப்பை ஈடு செய்யவே முடியாது. உலகமே அவரது மறைவு செய்தி அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. பலருக்கும் இன்ஸ்பயராக இருந்த உயர்ந்த மனிதன் உயிர் நீத்து விட்டார் என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வேட்டையன் நடிகர் இரங்கல்: ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் வில்லனாக நடித்துள்ள ராணா டகுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்த ரத்தன் டாடாவின் மறைவு மனவேதனை அளிக்கிறது. ஒரு மிகப்பெரிய ஜெயன்ட்டை இந்தியா இன்று இழந்துள்ளது என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











