மலையாளப்படத்தில் அஞ்சலியுடன் நடிக்கும் 'சீயான்'!
சென்னை : நடிகர் விக்ரம் ஹரி இயக்கும் 'சாமி 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் மலையாளத்தில் வினு ஜோசப் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றுவது விக்ரமுக்கு எளிதான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியான இவரின் புகைப்படம் இளம் நடிகர்கள் மத்தியில்கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

மிகவும் ஃபிட்டாக இருக்கும் அவரின் லேட்டஸ்ட் போட்டோவிற்கு அப்படி ஒரு லைக்ஸ். விஜய் சந்தர் இயக்கத்தில் அவர் தமன்னாவுக்கு ஜோடியாக 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படும் விரைவில் வெளியாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷுடன் 'சாமி 2' படத்தில் நடித்து வருகிறார். ஏற்கெனவே கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' என விக்ரம் நடிக்கும் படங்களின் லிஸ்ட் நீள்கிறது. இந்நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் வினு ஜோசப் இயக்கும் 'ரோசாப்பூ' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறாராம். 'இருமுகன்', 'சாமி 2' படங்களின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தான் இப்படத்தையும் தயாரிக்கிறாராம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











