100 நாள் ஜாலியா இருக்க பார்க்கிறான்: கணவரை கலாய்த்த அஞ்சனா
Recommended Video
சென்னை: நடிகர் கயல் சந்திரமவுலியும், அவரின் மனைவி அஞ்சனாவும் ட்விட்டரில் ஒருவரையொருவர் கலாய்த்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்கப் போகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பாக நடிகை சாந்தினி தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யார், யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு கணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான அஞ்சனா ஒரு ட்வீட் போட்டார்.
சுவாரஸ்யமான ஒன்று வருகிறது. அது நடக்கத் துவங்கியதும் தெரிவிக்கிறேன். உங்களின் அன்பும், ஆதரவும் தேவை என்று அஞ்சனா போட்ட ட்வீட்டை பார்த்த அவரின் கணவர் கயல் சந்திரமவுலியோ பிக் பாஸ் என்று கமெண்ட் போட்டார்.
சந்திரமவுலியின் பதிலை பார்த்த ஒருவர் உங்களை 100 நாட்கள் பிரிந்து இருக்க முடியுமான்னு அவரு காதலை அவரே பரிசோதிக்க பார்க்கிறார் அக்கா என்று கூற அஞ்சனாவோ, 100 நாள் ஜாலியா இருக்க பாக்கிறான் பா என்று பதில் அளித்துள்ளார்.
அஞ்சனா மீண்டும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து தான் அப்படி சூசகமாக ட்வீட் செய்துள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











