ஆத்தி.. ஜாக்கெட் இல்லாமல் சேலையில் செம போஸ்.. நம்ம விஜே அஞ்சனாவா இது? என பிரம்மித்த ஃபேன்ஸ்!
சென்னை: விஜே அஞ்சனா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் நடத்தி அதிரடி காட்டி வரும் நிலையில், தற்போது ஜாக்கெட் அணியாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
சன் மியூசிக் விஜேவாக இருந்த போதே அஞ்சனாவை ரசிகர்கள் அப்படி ரசித்து வந்தனர். கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் அஞ்சனாவை காதலித்து திருமணமே செய்துக் கொண்டார்.

34 வயதாகும் அஞ்சனா ஒரு மகனுக்கு அம்மாவாக இருந்தாலும் அழகில் இன்னமும் அப்படியே அசத்தி வரும் நிலையில், போட்டோஷூட்களை நடத்தி மாடலிங் துறையில் மாஸ் காட்டி வருகிறார்.
ஜாக்கெட் அணியாமல் போஸ்: விஜே அஞ்சனாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அதாவது 14 லட்சம் ரசிகர்கள் அஞ்சனாவை ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்து இருக்கிறார் அஞ்சனா ரங்கன். ஜாக்கெட் அணியாதது போல சேலையை அணிந்து கொண்டு அவர் கொடுத்துள்ள கிளுகிளுப்பான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஊதா கலரு சேலை: பர்ப்பிள் கலர் புடவையை அணிந்து கொண்டு பார்பி பொம்மை போல பக்காவாக போஸ் கொடுத்து பசங்க தூக்கத்தை கெடுத்துள்ளார் அஞ்சனா ரங்கன். அழகு அள்ளுது அஞ்சனா என ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது போல்டான போட்டோஷூட்டை பார்த்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

அட நம்ம குந்தவை: ஜாக்கெட் அணியாமல் அஞ்சனா ரங்கன் போஸ் கொடுத்ததை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து லைக்குகளை போட்டு வரும் நிலையில், அட நம்ம அஞ்சனாவா இது? என நெட்டிசன்கள் வாவ் ரியாக்ஷன்களை போட்டு வருகின்றனர். மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா குந்தவை லுக்கில் இருந்தது போல ஜோரா இருக்கீங்க அஞ்சனா என ரசிகர்கள் அஞ்சனாவுக்கே ஐஸ் வைத்து வருகின்றனர்.

அழகு ஓவியமாக மாறியுள்ள அஞ்சனா ரங்கன் மேலும், பல புதிய போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களையும் வரிசையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
அஞ்சனா இப்படி ஹெவியாக கவர்ச்சி காட்டி வரும் நிலையில், சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











