அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல வீஜே... பூஜாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலிருக்கே!
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் பீஸ்ட்.
Recommended Video
இந்தப் படத்தின் அரபிக்குத்து பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
அனிருத் இசையில் இந்தப் பாடல் வெளியாகியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பீஸ்ட் படம்
தளபதி விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பீஸ்ட் படம் ஏப்ரலில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாடலுக்கு கோரிக்கை
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் படக்குழுவினரை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். படத்தின் சூட்டிங் முடிவதற்கு முன்னதாகவே படத்தின் பாடலுக்கான எதிர்பார்ப்பும் எகிறியது.

நெல்சன் இயக்கம்
கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றிப் படங்களை அடுத்து நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.நெல்சன் அடுத்ததாக சூப்பர்ஸ்டாரை இயக்கவுள்ளார். முன்னதாக டாக்டர் படத்தின் அதிரி புதிரி வெற்றி மற்றும் அடுத்த படத்தில் சூப்பர்ஸ்டாரை இயக்கவுள்ளது போன்ற காரணங்களும் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

அரபிக்குத்து பாடல்
இதனிடையே படத்தின் அரபிக்குத்து பாடலை இரு தினங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்தப் பாடல் எப்போதும் போல விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. மாஸ்டர் படத்திலும் இதேபோல விஜய் பாடல்கள் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டது.

ட்ரெண்டிங்கில் பீஸ்ட் பாடல்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. இதுவரை 4.5 கோடி வியூசை பெற்றுள்ளது. 2.8 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

வீஜே அஞ்சனா ஆட்டம்
இதனிடையே இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் விருப்பத்துடன் ஆட்டம் போட்டு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல வீஜே அஞ்சனா ரங்கன், இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டு ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











