Anjana Rangan: அடியாத்தி.. அந்த இடத்துல டாட்டூ குத்திய அஞ்சனா ரங்கன்.. லைக்ஸ் சும்மா அள்ளுதே!

சென்னை: சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களுக்கு பாடல்களை போட்டு வந்த விஜே அஞ்சனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார். நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வரும் விஜே அஞ்சனா புதிய டாட்டூ ஒன்றை போட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜேவாக இருந்த போதே அஞ்சனாவை ரசிகர்கள் அப்படி ரசித்து வந்தனர். 34 வயதாகும் அஞ்சனா ஒரு மகனுக்கு அம்மாவாக இருந்தாலும் அழகில் இன்னமும் அப்படியே ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் அஞ்சனா பெரிய பெரிய சினிமா விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Anjana Rangan shares her new neck tattoo pics

14 லட்சம் ரசிகர்கள்: விஜே அஞ்சனாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் படு க்யூட்டாகவும் சில சமயங்களில் கிளாமர் கலந்தும் அவர் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே டிரெண்டாகி வருகின்றன. டிடி நீலகண்டன், விஜே அர்ச்சனா உள்ளிட்ட பிரபலங்கள் நடிகைகளுக்கே சில சமயம் சோஷியல் மீடியாவில் டஃப் கொடுத்து வருகின்றனர்.

மிஷன் சாப்டர் 1 ப்ரீ ரிலீஸ்: பொங்கலுக்கு வெளியாகி வெற்றியடைந்துள்ள அருண் விஜய்யின் மிஷன் பார்ட் 1 திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியையும் சமீபத்தில் அஞ்சனா ரங்கன் தான் ஹோஸ்ட் செய்திருந்தார். லியோ படத்தில் நடித்த இயல் இந்த படத்தில் அருண் விஜய்க்கு மகளாக நடித்த நிலையில், அஞ்சனா ரங்கன் அவரை கொஞ்சிய காட்சிகளையும் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார்.

Anjana Rangan shares her new neck tattoo pics

மின்னல் டாட்டூ: இந்நிலையில், லேட்டஸ்ட்டாக மின்னல் டாட்டூ ஒன்றை போட்டுள்ள அஞ்சனா ரங்கன் அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். வெள்ளை நிற சட்டையை அணிந்து கொண்டு செம சூப்பராக தனது டாட்டூவையும் காட்டி உள்ளார் அஞ்சனா ரங்கன்.

எந்த இடத்தில்?: அஞ்சனா ரங்கன் 6வது முறையாக டாட்டூவை தனது உடம்பில் குத்தியிருப்பதாக பதிவிட்டு இருக்கிறார். கழுத்துப் பகுதியில் மின்னல் வடிவ டாட்டூவை போட்டு ரசிகர்களை மெய் மறக்கச் செய்துள்ளார். அஞ்சனாவின் அந்த 6 டாட்டூக்களையும் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Anjana Rangan shares her new neck tattoo pics

ஜாக்கெட் அணியாமல்: ஜாக்கெட் அணியாமல் அஞ்சனா ரங்கன் சமீபத்தில் போஸ் கொடுத்ததை பார்த்து ரசிகர்கள் அட நம்ம குந்தவையா இது என வர்ணித்து லைக்குகளை குவித்தனர். அழகு ஓவியமாக மாறியுள்ள அஞ்சனா ரங்கன் மேலும், பல புதிய போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களையும் வரிசையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

எக்கச்சக்க கமெண்ட்ஸ்: கழுத்தில் புதிதாக குத்தியிருக்கும் மின்னல் டாட்டூவை அஞ்சனா ரங்கன் அழகாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில், வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகளே லைக் செய்துள்ளனர். மேலும், அஞ்சனா ரங்கனின் சென்னை தலைமை ரசிகர் மன்ற ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள் என்றும் நெட்டிசன்கள் அஞ்சனா போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். அச்சோ அஞ்சும்மாவுக்கு வலிக்கப் போகுது என்றும் தண்டர் ஸ்டார்ம் டாட்டூ சூப்பர் அக்கா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X