பாடகர் அங்கித் பலாத்கார வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டினார்: பாதிக்கப்பட்ட பெண்
மும்பை: தன்னை பலாத்காரம் செய்தததை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று இந்தி பாடகர் அங்கித் திவாரி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
ஆஷிகி 2 இந்தி படத்தில் சுன் ரஹா ஹை என்ற பாடலை பாடியதன் மூலம் பிரபலம் ஆன அங்கித் திவாரி 28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் முதன்முதலாக தனக்கு நேர்ந்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு,

அங்கித்
நான் அங்கித்தை 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் துர்கா பூஜையில் தான் முதன்முதலாக பார்த்தேன். இந்நிலையில் அவரது வழக்கறிஞர் நான் அவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறுவது பொய்.

பணம்
அங்கித் சினிமாவில் சாதிக்க முயற்சி செய்து வந்தபோது தான் நான் அங்கித்தை சந்தித்தேன். அவருக்கு போன் வாங்கிக் கொடுத்து, கட்டணத்தையும் நான் தான் கட்டினேன். அவர் ஒரு கோடி ரூபாய் கூட சம்பாதிக்காத நிலையில் நான் ரூ. 3 கோடி கேட்டதாக சொல்வதா?. நான் ஒரு நிறுவனத்தின் துணை தலைவர். எனக்கு பணம் தேவை இல்லை.

காதல்
மும்பை லோகந்த்வாலாவில் உள்ள காபி கடை ஒன்றில் வைத்து அங்கித் என்னிடம் அவரது காதலை தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். எனக்கு விவாகரத்தாகி ஒரு மகள் இருப்பதால் இது எல்லாம் சரி வராது என்று அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவரது குடும்பத்தாரை சமாதானம் செய்வதாக கூறினார்.

பிறந்தநாள்
ஜூலை 21ம் தேதி எனது சகோதரியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு இரவு 11.30 மணிக்கு எங்கள் வீட்டுக்கு அங்கித் வந்தார். அவர் என்னை மது அருந்த வைத்தார். பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று மேலும் குடிக்க வைத்து என் வாயில் கை வைத்து பலாத்காரம் செய்தார். இதையடுத்து என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.

வீடியோ
திருமணம் குறித்து பேசியபோது அங்கித் என்னை சீரழித்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் அதை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் கூறி மிரட்டி மிரட்டியே பலமுறை உறவு கொண்டார்.

அங்கூர்
அங்கித்தின் மிரட்டலை தாங்க முடியாமல் அவரது வீட்டுக்கு சென்று அவரின் பெற்றோரோடு பேசினேன். அப்போது அவரது சகோதரர் அங்கூர் என்னை கன்னத்தில் அறைந்து வெளியே தள்ளிவிட்டார். என்னுடன் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு வேறு பெண்ணை மணக்கப் போவதாக அங்கித் தெரிவித்தார். இது குறித்து நியாயம் கேட்க சென்ற என்னை அங்கித் அறைந்தார். அதன் பிறகே நான் போலீசில் புகார் கொடுத்தேன் என்றார் பாதிக்கப்பட்ட பெண்.


Click it and Unblock the Notifications











