என்னுடன் பழகியவரை சுஷாந்துக்கு மன அழுத்தம் ஏதும் இல்லை.. ரியா பேட்டிக்கு பதிலடி கொடுத்த அங்கிதா!

மும்பை: இந்தியா டுடே, ஆஜ் தக் உள்ளிட்ட டிவி சேனல்களுக்கு நடிகை ரியா நேற்று பிரத்யேக பேட்டிகளை கொடுத்து இருந்தார்.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர் தான் விஷம் கொடுத்து கொன்று விட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சுஷாந்துக்கு 2013ம் ஆண்டிலேயே மன அழுத்தம் இருந்ததாக ரியா கொடுத்த பேட்டிக்கு முன்னாள் காதலி அங்கிதா லோகாண்டே பதிலடி கொடுத்துள்ளார்.

ரியாவுக்கு சாதகமாக

ரியாவுக்கு சாதகமாக

ரியா சக்கரவர்த்திக்கு ஆதரவாகவே அந்த இரு செய்தி நிறுவனங்களும் நேற்று பேட்டியை ரியாவுக்கு சாதகமாகவும், ரியாவை அப்பாவியாய் காட்ட செயல்பட்டதாகவும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி உள்பட ஏகப்பட்ட ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். மேலும், ரியா பேசியதில் ஒன்றுமே உண்மை இல்லை என்றும் கூறுகின்றனர்.

உயரத்தில் பறக்க பயம்

உயரத்தில் பறக்க பயம்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு உயரத்தில் பறக்க பயம் என்றும் விமானத்தில் செல்லும் போது தான் அதை அறிந்து கொண்டதாகவும், அவருக்கு claustrophobic இருப்பதாகவும், அதற்காக மாத்திரைகளையும் அவர் எடுத்துக் கொண்டார் என்றார். அந்த பேட்டியே தற்போது நடிகை ரியாவுக்கு பாதகமாகவும் மாறியுள்ளது.

சுஷாந்துக்காக பறக்க பயம்

சுஷாந்துக்காக பறக்க பயம்

ரியா சக்கரவர்த்தியின் பேட்டி வெளியான நிலையில், நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியுமான அங்கிதா லோகாண்டே, சுஷாந்துக்கா விமானத்தில் செல்ல பயம் என விமானம் ஓட்டும் வீடியோ ஒன்றையே வெளியிட்டு ரியாவுக்கு பதிலடி கொடுத்தார். மேலும், பாலிவுட் ரசிகர்கள் சுஷாந்த் சிங் ஸ்கை டைவிங் செய்வது உள்ளிட்ட ஏகப்பட்ட வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரியாவின் கூற்று பொய் என சுட்டிக் காட்டி வருகின்றனர்.

2013லே மன அழுத்தம்

2013லே மன அழுத்தம்

மற்றொரு மிகப்பெரிய அறிவிப்பாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு 2013ம் ஆண்டு முதலே மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், அப்போதில் இருந்தே மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, மாத்திரைகளை அவர் போட்டுக் கொண்டார் என்றும் கூறியுள்ளார். மேலும், அங்கிதாவுடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்தும் கூறினார்.

2016ம் ஆண்டு வரை

2016ம் ஆண்டு வரை

இந்நிலையில், தற்போது நடிகை அங்கிதா லோகாண்டே வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், தானும் சுஷாந்த் சிங்கும் கடந்த 2016ம் ஆண்டு வரை பழகி வந்ததாகவும், அது வரை அவருக்கு மன அழுத்தமே இல்லை எனக் கூறி ரியா கூறியது முற்றிலும் பொய் என்பதை தெளிவுப்படுத்தி உள்ளார். மேலும், மணிகர்ணிகா படத்தில் தான் அறிமுகமாகும் செய்தி அறிந்து தனக்கு வாழ்த்து மெசேஜ் மட்டுமே அனுப்பினார் என்றும், அவருடன் அதன் பிறகு எந்த தொடர்பையும் தான் கொண்டு இருக்கவில்லை என்றும் விளக்கி உள்ளார்.

ரியாவிடம் விசாரணை

ரியாவிடம் விசாரணை

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், இன்று நடிகை ரியா சக்கரவர்த்தியை விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுஷாந்த் மரண வழக்கை துரிதப்படுத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் சீக்கிரமே சுஷாந்த் மரணத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை உலகம் அறியச் செய்வார்கள் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X