சுஷாந்துக்கு விமானத்தில் செல்ல பயமா.. வீடியோ வெளியிட்டு ரியா முகத்தில் கரியை பூசிய முன்னாள் காதலி!
மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு, விமானத்தில் செல்லும் போது, ஒரு வித பயம் ஏற்படும் என ரியா சக்கரவர்த்தி பேட்டி கொடுத்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அங்கிதா லோகாண்டே.
Recommended Video
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு நடிகை ரியா சக்கரவர்த்தி பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்ப்பு
ரியா சக்கரவர்த்தியை அப்பாவியை போல சித்தரிக்கும் அந்த பேட்டியையும் அதை எடுத்த செய்தி நிறுவனத்தையும் பாலிவுட் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்தும், அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி பேட்டி கொடுத்த ரியாவை வெளுத்து எடுத்துள்ளார்.

சுஷாந்துக்கு பயம்
அந்த பேட்டியில், நடிகை ரியா சக்கரவர்த்தி தாங்கள் கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றதாகவும் அப்போது விமானத்தில் செல்லும் போது ஏற்படும் ஒரு வித பயத்தால் (claustrophobia) சுஷாந்த் ரொம்பவே பாதிக்கப்பட்டார். அதற்காக Modafinil எனும் மருந்தையும் அவர் எடுத்துக் கொண்டார் என்றார்.

விமானம் ஓட்டும் வீடியோ
இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக claustrophobia என கேப்ஷன் போட்டு, அவர் எப்போதுமே உயரத்தை கண்டு பயந்தது கிடையாது. வானில் பறக்க வேண்டும் என்றே ஆசைப்படுபவர் என விமானம் ஒன்றை ஓட்டும் சிமுலேட்டர் பயிற்சியில் அவர் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டு, மறைமுகமாக ரியா சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நிலவுக்கே செல்ல
விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நாசாவில் இருந்து அவருக்கு சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டதை தனது வீடியோ ஒன்றில் வெளிப்படுத்தி இருப்பார். சனிக் கோளை ஆராயும் பிரம்மாண்ட டெலஸ் கோப்பும் அவர் தனது வீட்டில் வைத்திருந்தார். மேலும், 2024ம் ஆண்டு நிலவுக்கு செல்லும் விண்களத்தில் தானும் செல்ல தயாராகி கொண்டிருந்தவரை விமானத்தில் செல்லும் போது பயப்படுவார் என்று சொல்வது அப்பட்டமான பொய் என அவரது ரசிகர்கள் ரியாவுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

ஸ்கை டைவிங்
வானில் விமானத்தில் ஏறி கீழே குதிக்கும் ஸ்கை டைவிங், நாசாவில் விண்வெளிக்கு செல்லும் பயிற்சி பெற்றது. விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற வேண்டும் என்ற தனது ஆசை, நண்பர்களுடன் அடிக்கடி தனி விமானத்தில் பயணம் என செய்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அந்த பயம் இருப்பதாக கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.. என ரசிகர்கள் ரியாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











