சுஷாந்தின் முன்னாள் காதலி போட்ட இன்ஸ்டா பதிவு.. உடனடியாக நீக்கம்.. என்ன காரணம்.. ஃபேன்ஸ் டவுட்!
சென்னை: சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு உடனடியாக நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
Recommended Video
பாலிவுட் நடிகரான சுஷாந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதில் அவர் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மும்பையில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்ட சுஷாந்த் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இன்ஸ்டா போஸ்ட்
இந்நிலையில் சுஷாந்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டே, சுஷாந்த் மரணம் அடைந்த செய்தியை கேட்டதும் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போஸ்ட் செய்தார். ஆனால் அந்த போஸ்ட்டை அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் நீக்கிவிட்டார்.

கடவுள் கேட்டிருக்கிறார்
ஆனால் சிலர் அதனை ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து, வைரலாக்கி வருகின்றனர். அவரது பதிவில் கடவுள் உங்கள் வாழ்க்கையில் இருந்து சில மனிதர்களை நீக்குகிறார் என்றால், அவர் உங்களுடன் நடத்தாத உரையாடலை கடவுள் கேட்டிருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

நீக்கப்பட்ட பதிவு
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த பதிவை போஸ்ட் செய்தார் அங்கிதா. ஆனால் மாலை 6 மணிக்கெல்லாம் அதனை நீக்கி விட்டார் அவர். சுஷாந்த் சிங்கும், அங்கிதாவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பவித்ரா ரிஷ்டா என்ற சீரியலில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

நிச்சயதார்த்தம்
இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு சுஷாந்த், பாலிவுட் நடிகையான ரியா சக்ரபர்த்தியை காதலித்தார். ஆனால் அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிதா லோகெண்டேவுக்கு விக்கி ஜெய்ன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











