இதுக்கு மேல ஏதும் சொல்ல முடியாது.. சுஷாந்த் என் ஃபிளாட் இ.எம்.ஐ. கட்டல.. ஆதாரங்களை வெளியிட்ட காதலி!

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி, தனது ஃபிளாட் இ.எம்.ஐ. தொகையை தான் தான் கட்டி வருவதாக ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவில் ஏகப்பட்ட மர்மங்கள் இருப்பதாகவும், அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களும், ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பணத்தை எடுத்து சொத்துக்கள் வாங்கியதாக காதலி ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

பக்கத்து பக்கத்து ஃபிளாட்

பக்கத்து பக்கத்து ஃபிளாட்

இந்நிலையில், மும்பை மலாட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறை எண் 403 மற்றும் 404 என்ற இரு ஃபிளாட்களை சுஷாந்த் சிங்கும் அவரது மற்றொரு காதலியுமான அங்கிதா லோகாண்டே இருவரும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிதா அந்த ஃபிளாட்டில் தான் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

4.5 கோடி

4.5 கோடி

அந்த இரு அடுக்குமாடி குடியிருப்புகளும் ரூபாய் 4.5 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும், அதற்கான இ.எம்.ஐ தொகையை நடிகர் சுஷாந்த் சிங்கே கட்டி வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அங்கிதாவின் ரசிகர்கள், இது பொய் பிரசாரம் என்றும், ரியாவின் தூண்டுதல் பேரில் இது பரவுவதாகவும் கூறினர்.

விசாரணை

விசாரணை

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மற்றொரு காதலியான ரியா சக்கரவர்த்தி மீது, சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து 11 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளதாக சுஷாந்தின் தங்கை கே.கே. சிங் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

வங்கி ஆதாரங்களோடு

வங்கி ஆதாரங்களோடு

ரியா சக்கரவர்த்தியின் பேர் பண மோசடி வழக்கில் மாட்டி உள்ள நிலையில், மற்றொரு காதலியான அங்கிதாவின் வீட்டு இ.எம்.ஐ தொகை சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து சென்றதாக ஒரு தகவல் வைரலானது. அதனை அறிந்த உடனே, ஓடி ஒளியாமல், கடந்த 2019 முதல் 2020 வரை தனது வங்கி கணக்கில் இருந்து தான் வசிக்கும் குடியிருப்புக்கு இ.எம்.ஐ. கட்டி வரும் மாத ஸ்டேட்மென்ட்களை ஸ்க்ரீன் ஷாட்டுகளாக எடுத்து தனது ட்விட்டர் பகக்த்தில் பதிவிட்டுள்ளார் அங்கிதா.

வெளிப்படைத் தன்மை

வெளிப்படைத் தன்மை

மேலும், இந்த விவாகாரம் குறித்து தான் இதற்கு மேல் ஏதும் சொல்ல முடியாது என்றும், வெளிப்படைத் தன்மையுடன் தான் வாழ்ந்து வருகின்றேன் என்றும் பதிவிட்டுள்ளார் அங்கிதா. நீங்க கவலைப்படாதீங்க உங்களை நம்புறோம் இது பாலிவுட் மாஃபியாவின் சதி என்று அவருக்கு ஆதரவாகவும், சும்மா நடிக்காதீங்க என எதிராகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty
சுஷாந்த் சகோதரி

சுஷாந்த் சகோதரி

அங்கிதா லோகாண்டேவின் இந்த ட்வீட்டை பார்த்த பல பாலிவுட் பிரபலங்களும் அதை நம்புவதாக தெரிவித்து வந்த நிலையில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரியான ஸ்வேதா சங்கீத் கீர்த்தியும் அவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டுள்ளார். மேலும், நிச்சயம் சுஷாந்த் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X