ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு.. 'உண்மை வென்றது..' சுஷாந் சிங்கின் மற்றொரு காதலி பரபரப்பு போஸ்ட்!

By

மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, நடிகர் சுஷாந்தின் முன்னாள் காதலி, பரபரப்பு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Rhea Chakraborty manipulated Sushant Singh • 'புது திருப்பம்'

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் இவர். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா படம் கடந்த 24 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியாகி உள்ளது. நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் போலீசார் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களை முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.

சுஷாந்த் சிங் தந்தை

சுஷாந்த் சிங் தந்தை

இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார். மன அழுத்தத்துக்காக சுஷாந்த் பயன்படுத்திய மாத்திரைகள், மருந்து சீட்டுகளை மீடியாவுக்கு தெரியபடுத்தி விடுவேன் என்றும் அதன் மூலம் பைத்தியமாக நிரூபித்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

திஷா தற்கொலை

திஷா தற்கொலை

இதை, தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார் சுஷாந்த். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தன்னை யாரும் நடிக்க அழைக்கமாட்டார்கள் என்றும் சுஷாந்த் சகோதரியிடம் கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, நடிகை ரியாதான் கையாண்டு வந்துள்ளார். சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சுஷாந்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

பாட்னா போலீசார்

பாட்னா போலீசார்

இதையடுத்து ரியா, அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியது உட்பட சில பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரிடமும், அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை வந்துள்ளனர். இதற்கிடையே முன் ஜாமின் கோரி, ரியா கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட்டில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்கிதா லோகண்டே

அங்கிதா லோகண்டே

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான டிவி நடிகை அங்கிதா லோகண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேறு எதையுமே குறிப்பிடாமல், 'Truth Wins' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின், அவர் இதைப் பதிவிட்டதால், பல நெட்டிசன்கள் உண்மையின் பக்கம் கடவுள் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X