சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாசம் ஆகுது.. டிரெண்டாகும் முன்னாள் காதலிகள்.. ரியா vs அங்கிதா.. ஏன்?

மும்பை: கடந்த மாதம் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

Recommended Video

Best films of Sushant Singh Rajput that remains unforgettable

பாலிவுட்டையே அதிரவைத்த இந்த இளம் பாலிவுட் நடிகர் மறைந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகும் நிலையில், அவரது ரசிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நினைத்து வருந்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலிகளான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அங்கிதா லோகாண்டேவின் ஹாஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன.

ஒரு மாசம் ஆகுது

ஒரு மாசம் ஆகுது

கை போ சே படத்தின் மூலம் ஹீரோவாக பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி படமான தில் பேச்சாரா அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கண்டெடுக்கப்பட்ட சுஷாந்த்தின் மரணம் இந்தியளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இன்றுடன் அவர் மறைந்து ஒரு மாதம் ஆகிறது.

விளக்கேற்றிய அங்கிதா

விளக்கேற்றிய அங்கிதா

நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டே, சுஷாண்ட் சிங் ராஜ்புத் மறைந்து ஒரு மாதம் ஆவதை முன்னிட்டு, அவரது இழப்பால் பெரிதும் தான் வாடி வருவதாக தெரிவித்துள்ளார். தனது வீட்டில் சுஷாந்த் நினைவாக விளக்கேற்றி அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்துள்ளார்.

வாட்ஸப் புகைப்படம்

வாட்ஸப் புகைப்படம்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மற்றொரு முன்னாள் காதலியான ரியா சக்கரபோர்த்தி, தனது வாட்ஸப் டிபியை மாற்றியுள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு, சுஷாந்த் சிங் மறைவை தன்னால் தாங்க முடியவில்லை என்றும், ஆயுள் வரைக்கும் அவரையே நினைத்து வாழ்வேன் என்றும், மிக நீண்ட இன்ஸ்டா பதிவையும் பதிவிட்டுள்ளார்.

தொடரும் மர்மம்

தொடரும் மர்மம்

எம்.எஸ். தோனி, சிக்கோரே போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகுக்கும் அதிர்ச்சியையும், பிரச்சனைகளையும் கிளப்பின. காதல் தோல்வியா? பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதா? என பல விடை தெரியாத கேள்விகள் சுழல்வதால், சுஷாந்த் மரணமும் மர்ம மரணமாகவே தொடர்கிறது.

திடீர் பாசம்

திடீர் பாசம்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நிராகரித்து விட்டு, ஆலியா பட்டின் தந்தையும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான மகேஷ் பட் உடன் நடிகை ரியா சக்கரபோர்த்தி நெருக்கமாக இருந்து வந்தார். இந்நிலையில், சுஷாந்த் ராஜ்புத் இறந்து ஒரு மாதம் ஆன பிறகு, அவர் குறித்து இப்படியொரு பதிவை போட்டு, அவர் நல்ல நடிகை என்பதை நிரூபித்து வருகிறார் என நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.

ரியா vs அங்கிதா.

ரியா vs அங்கிதா.

#AnkitaLokhande என்ற ஹாஷ்டேக்கையும் அங்கிதாவின் ரசிகர்களும், வாட்ஸப் டிபியை மாற்றிய நிலையில், #RheaChakraborty ஹாஷ்டேக்கும் டிவிட்டரில் வைரலாக டிரெண்டாகி வருகிறது. அப்பவே காதலை ஏற்காமல், இப்போது இருவரும் நாடகம் ஆடுகிறார்கள் என நெட்டிசன்களும், சுஷாந்த் ரசிகர்களும் இருவரையும் திட்டித் தீர்த்தும், இருவரையும் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X