கருத்து வேறுபாடு.. காதல் கணவரை விவாகரத்து செய்கிறார் பிரபல நடிகை.. திரையுலகில் பரபரப்பு!

By

கொச்சி: பிரபல நடிகை தனது காதல் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகை ஆன் அகஸ்டீன். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

பிஜோய் நம்பியார் இயக்கிய சலோ என்ற ஆந்தாலஜி படம் மூலம் தமிழுக்கும் வந்தார் ஆன் ஆகஸ்டின்.

அர்ஜுனன் சாக்ஸி

அர்ஜுனன் சாக்ஸி

இவர், பிரபல மலையாள நடிகர் அகஸ்டினின் மகள். தந்தையை போலவே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆன் ஆகஸ்டின், அர்ஜுனன் சாக்ஸி, த்ரி கிங்ஸி, வாத்யார், டா தடியா, சிம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தனது அறிமுக படத்துக்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஜோமோன்

ஒளிப்பதிவாளர் ஜோமோன்

இவரும் பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமன் டி. ஜானும் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஜோமன், தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன், தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்கும் பாவக்கதைகள் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய கதைக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

என்னுநின்டே மொய்தின்

என்னுநின்டே மொய்தின்

மலையாளத்தில், தட்டத்தின் மறையத்து, என்னுநின்டே மொய்தின், சார்லி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். பகத் பாசில் நடிக்கும் இருள், பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் கேஸ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

குடும்ப நல நீதிமன்றம்

குடும்ப நல நீதிமன்றம்

இந்தியிலும் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் சிர்கஸ் படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இவரும் நடிகை ஆன் ஆகஸ்டினும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விவகாரத்து தகவல்

விவகாரத்து தகவல்

இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 9 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சமீபகாலமாக சினிமா துறையில் நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்வது அதிகரித்து வருகிறது. நடிகை ஆன் அகஸ்டின்- ஜோமன் விவகாரத்து செய்ய இருக்கும் தகவல் கேரள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X