விரைவில் தொடங்கும் அண்ணாத்த 3வது ஷெட்யூல்.. எப்போது ஆரம்பம்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், வேல ராமமூர்த்தி, ஜாக்கி ஷெராஃப் என பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

கொரோனா தொற்று
இந்நிலையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியது.
ஆனால் படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

ஓய்வில் இருந்த ரஜினி
இதனை தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நலக் குறைவு எற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பருக்குள் படத்தை முடித்து விட்டு அரசியலில் இறங்கும் முடிவில் இருந்தார் ரஜினி. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக, அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார்.

தீபாவளிக்கு ரிலீஸ்
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது

மீண்டும் தொடங்கும் ஷூட்டிங்
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் மீதமுள்ள காட்சிகள் எப்போது படமாக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் மீண்டும் எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
அதன்படி இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











