பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த “அண்ணாத்த“… அடேங்கப்பா இத்தனை கோடி வசூலா !

சென்னை : அண்ணாத்த படம் ரிலீஸான ஆறே நாட்களில் உலக அளவில் ரூ. 196.08 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது.

இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த

அண்ணாத்த

அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. ரஜினிகாந்தும் கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கையாக வருகிறார். கீர்த்தி சுரேஷ் வடமாநிலத்தில் இருந்து படித்து விட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் என்ன படித்தார் என்ற தகவல் இல்லை, கதாபாத்திரம் மிகவும் மேலோட்டமாக காட்டப்பட்டுள்ளது.

அண்ணன் தங்கை பாசம்

அண்ணன் தங்கை பாசம்

அண்ணன் தங்கையாக வரும் ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாசம் தான் படத்தின் அடிப்படை இருந்தது. ஆனால், படத்தில் அவர்களின் பாசத்தை சொல்லக்கூடிய ஒரு காட்சிகூட இல்லை என திரைப்படம் குறித்து பல நெகட்டிவ் கருத்துக்கள் இணையத்தில் வேகமாக பரவின. இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சோர்வு அடைந்ததாக கூறப்பட்டது.

6 நாளில் இத்தனைகோடியா?

6 நாளில் இத்தனைகோடியா?

இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படம் 196 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியான முதல் நாளில் 70.19 கோடியும், இரண்டாவது நாளில் 42.63 கோடியும், 3வது நாளில் 33.71 கோடியும், 4வது நாளில் 28.20 கோடியும் வசூலாகி உள்ளது. 6 நாட்களில் மொத்தம் 196.08 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

குடும்பம் குடும்பமாக

குடும்பம் குடும்பமாக

எதிர்மைறை விமர்சனங்கள் வந்த போதிலும், திரையரங்குகள் நிரம்பியே காணப்படுகின்றன. குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்த்தனர். ஒரு சில குடும்பங்களில் மூன்று தலைமுறையினர், 4 தலைமுறையினர் எல்லாம் வந்திருக்கிறார்கள். அண்ணாத்த படத்தை பார்க்க குட்டீஸ் கூட்டம் கூட அதிகம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X