தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசாகும் அண்ணாத்த, எனிமி படங்கள்... ரசிகர்கள் உற்சாகம்
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, விஷால் -ஆர்யாவின் எனிமி படங்ள் தீபாவளியையொட்டி திரையங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதேபோல சூர்யாவின் ஜெய் பீம் மற்றும் சசிக்குமாரின் எம்ஜிஆர் மகன் ஆகிய படங்கள் தீபாவளியையொட்டி ஓடிடியில் ரிலீசாகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிவரும் டாக்டர் படம் தீபாவளி ட்ரீட்டாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி என்றாலே இந்திய அளவில் கொண்டாட்டமான பண்டிகையாக உள்ளது. இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் இந்தியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி காணப்படுகிறது. புதுத்துணி, பட்டாசுகள் என்று தீபாவளிக் கொண்டாட்டத்தை கணக்கில் அளக்க முடியாது.

தீபாவளியை அழகாக்கும் புதுப்படங்கள்
மேலும் அந்தப் பண்டிகையை அழகாக்குவது அன்றைய தினம் ரிலீசாகும் புதுப்படங்கள் தான். கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் தீபாவளியை கொண்டாட முடியாதவர்கள் இந்த ஆண்டில் கொரோனா ஓரளவிற்கு மட்டுப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடித் தீர்க்க காத்திருக்கின்றனர்.

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம்
அதற்கு ஏற்றாற்போல நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படமும் இந்த தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெறுவருகிறது. படத்தின் 4 பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெயிலர் ஆகியவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
Recommended Video

காத்திருக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டாரின் படத்துடன் தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாட தற்போதே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல அண்ணாத்த படம் சிவா இயக்கத்தில் திருவிழா கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அதிகமான நட்சத்திரங்களுடன் படம் சிறப்பாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான கமர்சியல் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

எனிமி படம்
இந்நிலையில் அடுத்ததாக விஷால் -ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி படமும் தீபாவளி பந்தயத்தில் உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர், டீசர் உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்துள்ளது. படத்தில் விஷாலுக்கு எனிமியாகியுள்ளார் ஆர்யா. இருவருக்கும் படத்தில் சமமான கேரக்டர்கள் காணப்படுவதை ட்ரெயிலர் மூலம் உணர முடிகிறது. படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஓடிடியில் ரிலீசாகும் ஜெய் பீம்
இதனிடையே நடிகர் சூர்யா முதல்முறையாக வழக்கறிஞராக நடிக்கும் ஜெய் பீம் படம் நேரடியாக ஓடிடியில் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. தீபாவளியையொட்டி பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் ஓடிடியில் வெளியாகிறது. இதில் சசிக்குமார் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் டிவியில் டாக்டர் ஒளிபரப்பு
இதனிடையே தீபாவளியை திரையரங்குகளுக்கு சென்று என்ஜாய் செய்ய முடியாதவர்களுக்காகவே சன் டிவி சிறப்பான விஷயத்தை செய்துள்ளது. வரும் தீபாவளியன்று மாலை சன் டிவியில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஒளிபரப்பப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது டாக்டர். இந்நிலையில் தீபாவளி ட்ரீட்டாக ரசிகர்களை காண வருகிறது டாக்டர்.

கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்
மொத்தத்தில் கொரோனாவையும் எதிர்கொண்டு இந்த தீபாவளியை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அவர்களுக்கு தீனி போடும் வகையில் புதிய படங்கள் வெளியாகவுள்ளன. அதேபோல வீட்டிலிருந்தே அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடவும் டாக்டர் படம் ஒளிபரப்பாக உள்ளதும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.


Click it and Unblock the Notifications











