அண்ணாத்தே படத்தோட பர்ஸ்ட் லுக்... மீனா வெளியிட்ட போஸ்டர்... ரசிகர்கள் உற்சாகம்
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மீனா, குஷ்பூ, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்தே.
இந்த படம் ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில், படத்தில் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவற்றின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சூட்டிங் நிறைவு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் அண்ணாத்தே. டி இமான் இசையைமப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் ட்ரெயிலர் ஆகியவை வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதே தடைட்டில் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது.

ஷேர் செய்த நடிகை மீனா
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை மீனா ரசிகர் ஒருவர் உருவாக்கியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதையடுத்து படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்பது அவர் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் ஒரிஜினல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். டைட்டில் போஸ்டரையே கலக்கலாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த போஸ்டரும் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











