“அண்ணாத்த“ இத்தனை கோடி நஷ்டமா?… ஹிட்டுனு சொன்னது எல்லாம் உருட்டா !

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த திரைப்படத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி அன்று நவம்பர் 4 ந் தேதி திரைக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு, பாண்டியராஜன், லிவிங்கஸ்டன், வேலராமமூர்த்தி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

அண்ணாத்த

அண்ணாத்த

பொதுவாக சிறுத்தை சிவா படம் என்றாலே அதில் சென்டிமென்ட் சீன் தூக்கலாகவே இருக்கும், அதற்கு சிறிதும் குறைவைக்காமல் அண்ணாத்த திரைப்படத்திலும் அண்ணன் தங்கை பாசத்தை படம் முழுக்க கொட்டி விட்டு இருந்தார். எந்த காட்சியை பார்த்தாலும், ஏதோ படத்தை நினைவு படுத்துவது போல இருந்தால், என்னடா என்று ரசிகர்கள் கடுப்பானார்கள் என விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும் ரஜினியின் ஸ்டைலால் படம் ஹிட்டுனு கூறப்பட்டது.

திரையரங்குகள் காலி

திரையரங்குகள் காலி

அண்ணாத்த வெளியான முதல் வாரத்திலேயே பெரிதாக வசூல் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியதால் பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்கின. இருப்பினும்,அண்ணாத்த திரைப்படம் வசூலில் மாஸ் என்பது போல பொய்யான பிம்பத்தை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்

பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்

கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பது போல பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் இவ்வளவு அவ்வளவு என்று தகவல்கள் இணையத்தில் வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில், அண்ணாத்த திரைப்படத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Annathe படத்தை Fans-வுடன் பார்த்த Dhanush | Annathe Audience Opinion
14 .5 கோடி நஷ்டம்

14 .5 கோடி நஷ்டம்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையையும் கண்காணிக்க வெளிப்படையான அமைப்பு இல்லாததாலும், வசூல் குறித்த தகவலை பகிர்ந்து கொள்வதில் சன் பிக்சர்ஸ் மௌனம் காத்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அண்ணாத்த திரைப்படம் 169 கோடி வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் படத்திற்கான மொத்த செலவு 182 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட 14.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X