அண்ணாத்த படத்தின் முழு ஆல்பம்... இன்று மாலை ரிலீசாகும் என அறிவிப்பு

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்து வரும் 4ம் தேதி ரிலீசாக உள்ள படம் அண்ணாத்த.

இந்தப் படத்தின் 4 பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் படத்தின் முழு ஆல்பமும் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி சதீஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது அண்ணாத்த. டைரக்டர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிக சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியின் படம் தீபாவளிக்கு ரிலீசாவதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கலையுலகின் மிகச்சிறந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.

Recommended Video

பேரனுடன் ANNATHE படம் பார்த்த Superstar Rajinikanth | Soundarya Rajinikanth
ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில் அவருடன் இணைந்து அண்ணாத்த படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் 4 பாடல்கள் இதுவரை வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதேபோல படத்தின் டீசர், ட்ரெயிலரும் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

சிறப்பான ப்ரமோஷன் பணிகள்

சிறப்பான ப்ரமோஷன் பணிகள்

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தின் பிரமோஷன் பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முழு ஆல்பம் வெளியாக உள்ளதாக அதன் ட்விட்டா பககத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சும்மா கொண்டாட்டம் கொண்டாட்டம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அண்ணன் -தங்கை பாசம்

அண்ணன் -தங்கை பாசம்

ஏற்கனவே வெளியாகியுள்ள 4 பாடல்களும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. டி இமான் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. படத்தின் பின்னணியிலும் இமான் மிரட்டியுள்ளார். படத்தில் கமர்ஷில் அம்சங்கள் அதிகமாக உள்ள நிலையில் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

படத்தின் புதிய ப்ரமோ

இந்நிலையில் படத்தின் புதிய ப்ரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. நியாயமும் தைரியமும் ஒரு பெண்பிள்ளைக்கு இருந்தால் அந்த சாமி இறங்கிவந்து அவளுக்கு துணையாக இருக்கும் என்று ரஜினி இந்தப் பிரமோவில் கூறுகிறார்.இதை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ், சாமி இறங்கும் நேரம் வந்தாச்சு என்று தெரிவித்துள்ளது.

அண்ணாத்த தீபாவளி

அண்ணாத்த தீபாவளி

மொத்தத்தில் இந்த திபாவளி அண்ணாத்த தீபாவளியாக ரசிகர்களுக்கு இருக்கும் என்பது இப்போதே கண்கூடாக தெரிகிறது. டிக்கெட் புக்கிங் ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆவலை காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X