அண்ணாத்த படத்தின் சாரக்காற்றே வீடியோ பாடல்... இன்று மாலை வெளியாகிறது

சென்னை : சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தங்கையாக கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் படத்தில் ரஜினி -நயன்தாராவின் டூயட் பாடல் சாரக்காற்றே இன்று மாலை வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

 அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகி தீபாவளியையொட்டி கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பிவரும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் இந்தப் படம் பரவலாக அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இமான் இசை

இமான் இசை

உலகளவில் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாய் க்ளப்பில் இந்தப் படம் இணைந்துள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ மற்றும் மீனா என 4 நாயகிகள் உள்ள நிலையில் இமான் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி என தூள் கிளப்பியுள்ளது படம்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினி படத்திற்கே உரிய கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தும் இந்தப் படத்தில் மேலோங்கி இருந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியின் பழைய நாயகிகளான மீனா மற்றும் குஷ்பூ இந்தப் படத்தில் இணைந்திருந்தது சிறப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

மேலும் ரஜினி -கீர்த்தி சுரேஷ் இடையிலான பாசம் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளும் ரசிகர்களால் குறிப்பாக ரசிகைகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இமான் இசையமைப்பில் படத்தின் அனைத்து பாடல்களும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சாரக்காற்றே வீடியோ பாடல்

சாரக்காற்றே வீடியோ பாடல்

இந்நிலையில் படத்தின் வீடியோ பாடல்களை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ரஜினி மற்றும் நயன்தாராவின் ரொமாண்டிக் பாடல் சாரக்காற்றே வீடியோ வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

மிகவும் அழகாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் ரஜினி மிகவும் இளமையாக காட்டப்பட்டுள்ளார். நயன்தாரா மற்றும் ரஜினிக்கு இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடலின் வீடியோ வெளியாக உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X