ரஜினியுடன் 26 வருடங்களுக்கு முன் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் பெரியாத்தா.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: அண்ணாத்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பெரியாத்தா 26 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்துடன் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த.

இந்தப் படம் கடந்த 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

முக்கிய கதாப்பாத்திரம்

முக்கிய கதாப்பாத்திரம்


இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, ஜெகபதி பாபு, சதீஷ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குலப்புல்லி லீலா

குலப்புல்லி லீலா

இந்தப் படத்தில் பெரியாத்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த முத்த நடிகை குலப்புல்லி லீலா குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குலப்புல்லி லீலா அண்ணாத்த படத்தில் பெரியாத்தா என்ற திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முத்து படத்தில் நடித்துள்ளார்

முத்து படத்தில் நடித்துள்ளார்


இவர் அண்ணாத்த படத்திற்கு முன்பாகவே நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். அதாவது, கடந்த 1995 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டும் நடித்துள்ளார்.

மலையாளப் படங்களில்

மலையாளப் படங்களில்

குலப்புல்லி லீலா நடித்த அந்த காட்சியை மட்டும் படமாக எடுத்து பலரும் தற்போது சமூகவலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த குலப்புல்லி பல்வேறு மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

பாராட்டிய ரஜினி

பாராட்டிய ரஜினி


தான் முத்து படத்தில் சிறு கதாப்பாத்தில் நடித்ததை அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினியிடம் அவர் கூறினாராம் நடிகை குலப்புல்லி லீலா. இதனைக் கேட்ட ரஜினி அவரின் கதாபாத்திரத்தை பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

100க்கும் மேற்பட்ட படங்கள்

100க்கும் மேற்பட்ட படங்கள்

குலப்புல்லி லீலா தற்போது தமிழ் சினிமாவில் பாட்டி கதாப்பாத்திரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார். மருது படத்தில் விஷாலுக்கு பாட்டியாக நடித்து பெரும் பிரபலமானார் குலப்புல்லி லீலா. குலப்புல்லி லீலா மலையாளத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X