பேக் டூ ஃபார்மான ரஜினி.. மீண்டும் தொடங்கும் அண்ணாத்த ஷுட்டிங்.. ஜாலி மோடில் ஃபேன்ஸ்!

சென்னை: அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜாக்கி ஷெராஃப் என பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

இந்நிலையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

அரசியலுக்கு வரவில்லை

அரசியலுக்கு வரவில்லை

இதனை தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பருக்குள் படத்தை முடித்து விட்டு அரசியலில் இறங்கும் முடிவில் இருந்தார் ரஜினி. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக, அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்த ரஜினி தொடர்ந்து ஓய்வில் இருந்தார்.

தீபாவளிக்கு ரிலீஸ்

தீபாவளிக்கு ரிலீஸ்

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என அறிவிக்கப்பட்டது.

ரஜினியுடன் சந்திப்பு

ரஜினியுடன் சந்திப்பு

இதனால் படப்பிடிப்பை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார் அண்ணாத்த படத்தின் இயக்குநரான சிறுத்தை சிவா. இதனை தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இளையராஜாவுடன் சந்திப்பு

இளையராஜாவுடன் சந்திப்பு

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டிற்கான பூமி பூஜையில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து இளையராஜாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த ரஜினி, அவரது ஸ்டுடியோவுக்கும் சென்றார். இதனால் நடிகர் ரஜினி பழையப்படி ஃபார்முக்கு வந்துவிட்டார் என தெரிந்தது.

மார்ச் 15 ஆம் தேதி

மார்ச் 15 ஆம் தேதி

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஈவிபி பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X